மேலும் அறிய

RRB ALP Recruitment: 10ஆம் வகுப்பு போதும்; 9970 பணியிடங்கள்- ரயில்வே பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

RRB ALP Recruitment 2025: 2025ஆம் ஆண்டுக்கான உதவி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, இந்திய ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் மூலம் ரயில்வே பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் உதவி ஓட்டுநர் பணிக்கான (Assistant Loco Pilot) தேர்வும் நடத்தப்படுகிறது.

முன்னதாக 2024ஆம் ஆண்டுக்கான ஏஎல்பி முதற்கட்டத் தேர்வு கணினி மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

சர்ச்சையான தேர்வு

முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு, இரண்டாம் கட்ட கணினித் தேர்வுகள் (CBT 2) கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்தன. இந்தத் தேர்வை எழுத தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையானது.

பல நூறு கி.மீ. தூரம் பயணம் செய்து தேர்வர்கள் சென்ற நிலையில், தேர்வு சில மையங்களில் திடீரென ரத்து செய்யப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. தொழில்நுட்பக் காரணங்களால் இன்றைய தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்தது.

உதவி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான உதவி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, இந்திய ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வர்கள், மே 9ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

01.07.2025 அன்று  18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருந்தால் போதுமானது. இவர்களுக்கு ஆரம்பக்கட்ட ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். மொத்தமாக 9,900 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முறை எப்படி? ( RRB ALP Recruitment 2025: Selection Process)

  1. கணினி வழி முதல்நிலைத் தேர்வு (CBT 1)
  2. கணினி வழி இரண்டாம் நிலைத் தேர்வு (CBT 2)
  3. கணினி வழியில் திறனாய்வுத் தேர்வு (CBAT)  
  4. சான்றிதழ் சரிபார்ப்பு
  5. மருத்துவப் பரிசோதனை

விண்ணப்பிப்பது எப்படி?

  • தகுதியுள்ள தேர்வர்கள் https://indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்குச் செல்லவும்:
  • "RRB ALP ஆட்சேர்ப்பு 2025 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதை கிளிக் செய்யவும்.
  • தேர்வர்கள் தங்களின் விவரங்களை (பெயர், மின்னஞ்சல், மொபைல் எண்) உள்ளிட்டு, பதிவு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
  • தேர்வர்களின் புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றவும்.
  • படிவத்தைச் சமர்ப்பித்து, வருங்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://indianrailways.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget