Gold Rate Unstoppable: கோவிந்தா கோவிந்தா.!! எட்டாக் கனியாக மாறும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, 67,000 ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி, இன்று 67,000 ரூபாயை கடந்த புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது. இந்நிலையில், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனி தங்கம் வாங்குவது கனவு போல் மாறிவிட்டது.
தொடர்ந்து உயர்வை சந்தித்து ரூ.67,000-ஐ கடந்த தங்கம் விலை
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த 26-ம் தேதி ஏறுமுகத்திற்கு மாறிய தங்கத்தின் விலை, அன்றைய தினத்தில் கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, 8,195 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 27-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 8,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 65,880 ரூபாய்க்கும் விற்பனையாது.
தொடர்ந்து, 28-ம் தேதி ஒரே நாளில் கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்தது. இதையடுத்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 8,340 ரூபாயை தொட்டது. அதன்படி, சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் வரலாற்று உச்சமாக, 66,720 ரூபாயை எட்டியது.
இந்நிலையில், அதையும் கடந்து, 29-ம் தேதி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது தங்கம். அதன்படி, தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக 8,360 ரூபாயை எட்டியது. ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சமாக 66,880 ரூபாயை எட்டியது.
தொடர்ந்து, 30-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கத்தின் விலை, இன்று 67,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமிற்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,425 ரூபாய் என்ற புதிய உச்ச விலையை எட்டியது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 67,400 என்ற புதிய வரலாற்று உச்ச விலையை தங்கம் அடைந்துள்ளது.
3 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி
வெள்ளியின் விலையை பொறுத்தவரை, கடந்த 28-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து 114 என்ற உச்ச விலையை எட்டியது. அதன்படி, ஒரு கிலோ பார் வெற்றி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை அடைந்தது. ஆனால், மறுநாளான 29-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 113 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாது. இதைத் தொடர்ந்து, இன்று வரை அதே விலையில் நீடித்து வருகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சங்களை தொட்டு வரும் நிலையில், தங்கம் வாங்குவது தங்களுக்கு கனவாக மாறிவிடுமோ என, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை ஏற்றம் தொடர்ந்து வருவதால், வரும் நாட்களிலும் புதிய உச்சங்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

