மேலும் அறிய

NCET 2025: இன்றே கடைசி; ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பில் சேர விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?

NCET 2025 Registration: மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

அது என்ன ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு?

குறிப்பிட்ட மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநிலப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், என்ஐடிகள், அரசுக் கல்லூரிகளில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதில், இரட்டை மேஜர் படிப்புகள், குறிப்பாக பள்ளி அளவிலான கல்வி மற்றும் குறிப்பிட்ட துறைசார் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

பொது நுழைவுத் தேர்வு

இந்தப் படிப்புகளில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு என்சிஇடி (National Common Entrance Test - NCET) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் 13 மொழிகளில் 178 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கணினி முறையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான தேர்வுக்கு மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்து இருந்தது. மார்ச் 18 - 19ஆம் தேதிகளில் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இன்றே கடைசி

தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, விண்ணப்பிக்க அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

தொடர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு மைய விவரம் வெளியிடப்பட உள்ளது. என்சிஇடி தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கெட், தேர்வுக்கு 3, 4 நாட்கள் முன்னதாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புகள்

இங்கு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, என்ஐடி திருச்சியில், பி.ஏ., பிஎட் என்ற பெயரில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கும் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://exams.nta.ac.in/NCET/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை, தேர்வு மைய விவரங்கள், வினாத்தாள், இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த முழு தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NCET/images/public-notice-for-inviting-online-application-of-ncet-2025-dated-20-feb-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

தொலைபேசி எண் - 011-4075 9000

மெயில் முகவரி - ncet@nta.ac.in

 கூடுதல் தகவலைப் பெற- https://exams.nta.ac.in/NCET/ 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
Embed widget