மேலும் அறிய

கள்ளக்குறிச்சியில் பயங்கரம்... மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்

கள்ளக்குறிச்சியில் விசிக பெண் நிர்வாகி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே நானும் ரவுடிதான் என்பதைப் போல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விசிக பெண் மாவட்டச் செயலாளர், ஒன்றரை மாதத்திற்குப் பின் வெளியான சம்பவம் தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர் வீட்டில் விசிக பெண் நிர்வாகி தாக்குதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர், விசிக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், பழனியம்மாள் தனது வீட்டிற்கு எதிரில் சுமார் 10 சென்ட் பரப்பளவிலான இடத்தில் பலவிதமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து வந்துள்ளார். தன்னுடைய பட்டா இடத்தில் வேறொருவர் எப்படி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடியும் எனக்கூறி கனகராஜ் மகன் மருத்துவர். சரவணன் என்பவர் மரத்தை வெட்டி வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விசிக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பழனியம்மாள், யாருடைய பட்டா இடத்திலும் நான் மரக்கன்றுகளை வளர்க்கவில்லை. அரசுக்குச் சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் தான் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறேன் எனக்கூறி, அடியாட்களை வரவழைத்து, சரவணன் வீட்டின் முன்பக்கம் உள்ள  கேட் மற்றும் ஜன்னல் ஆகியவற்றை கல் மற்றும் கட்டையால் அடித்து, உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து, சரவணன் குடும்பத்தினரை பழனியம்மாள் கையாலும், கற்களைக் கொண்டும் தாக்கியுள்ளார். மேலும் அங்கு நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்த சரவணனை மிரட்டி அவரிடமிருந்து செல்போனையும் பிடிங்கிச் சென்றுள்ளார். அதனை வாங்க சென்ற நபரை பழனியம்மாள் கணவர் வேல்முருகன் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, இருதரப்பினர் அளித்தப் புகாரின் பேரில், தியாகதுருகம் காவல் நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஒன்றரை மாதத்திற்குப் பின், இச்சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!

TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்

Annamalai University: நீண்ட ஆண்டாக போராடும் அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள்- கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்

ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Annamalai University: நீண்ட ஆண்டாக போராடும் அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள்- கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
Annamalai University: நீண்ட ஆண்டாக போராடும் அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள்- கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !

Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!

Jananayagan: ஜனநாயகன் படம் இப்படித்தான் இருக்கும்.. வெளியான மாஸ் அப்டேட்!

Delhi Blast: கார் குண்டு வெடிப்பால் குலுங்கிய டெல்லி.! பாதுகாப்பை அதிகரியுங்க- அலர்ட் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள்
கார் குண்டு வெடிப்பால் குலுங்கிய டெல்லி.! பாதுகாப்பை அதிகரியுங்க- அலர்ட் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள்
Embed widget