மேலும் அறிய
Bread Cookies Recipe: அடேயப்பா..ப்ரெட்டை வைத்து குக்கீஸ் கூட செய்யலாமா? இதோ சுவையான ப்ரெட் குக்கீஸ் ரெசிபி!
Bread Cookies Recipe in Tamil: சுவையான சிம்பிளான குக்கீஸை ப்ரெட் வைத்தே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ப்ரெட் குக்கீஸ்
1/6

பொதுவாக ப்ரெட்டை பயன்படுத்தி சான்விட்ச், ப்ரெட் டோஸ்ட் ஆகியவை செய்து தான் நாம் சுவைத்திருப்போம். ஆனால் ப்ரெட்டில் குக்கீஸ் செய்யலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஆமாம்..சுவையான சில்பிளான குக்கீஸை ப்ரெட் வைத்தே செய்யலாம். ரெசிபி இதோ..!
2/6

தேவையான பொருட்கள்: மைதா - 1 கப், பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி, உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம், சர்க்கரை - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, முட்டை - 1, பிரட் தூள், சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப், வால்நட்ஸ் - 1/2 கப் நறுக்கியது.
3/6

செய்முறை: முதலில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடரை, பாத்திரத்தில் சலித்து எடுத்து கொள்ளவும். பிறகு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
4/6

மற்றொரு பாத்திரத்தில், வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்து கொள்ளவும். அதில் முட்டை சேர்த்து பீட் செய்யவும்.. பிறகு அதில் மாவு கலவை, பிரட் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
5/6

அடுத்து அதில் சாக்லேட் சிப்ஸ், மற்றும் வால்நட்ஸ் சேர்த்து கிளறவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி பேக்கிங் தட்டில் வைக்கவும்.
6/6

ஓவனை 180°C அளவில் 15 நிமிடம் சூடாக்கவும். பிறகு குக்கீஸை 180°C அளவில் 20 நிமிடம் பேக் செய்யவும். அவ்வளவு தான் சுவையான பிரட் குக்கீஸ் தயார்
Published at : 26 Jul 2023 07:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion