ராஷ்மிகா மந்தனாவுக்கு குட்டி தங்கச்சி இருக்கா...அடேங்கப்பா இத்தனை வருட வித்தியாசமா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஒரு குட்டி தங்கை இருக்கும் தகவல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது

ராஷ்மிகா மந்தனா
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இன்று ஒட்டுமொத்த இந்தியர்களும் அடையாளம் காணும் நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தனுஷின் குபேரா படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 பான் இந்திய வெற்றிபெற்றது. இந்தியில் அனிமல் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த சாவா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. அடுத்தபடியாக முருகதாஸ் இயக்கும் சிகந்தர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
ராஷ்மிகா மந்தனாவின் குட்டி தங்கை
தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவர் ராஷ்மிகா. கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா திருமணன் செய்துகொள்ள இருந்தார். இருவருக்கும் திருமண நிச்சயம் கூட நடைபெற்றது. பின் இருவரிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தன. நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகா தனக்கு ஒரு குட்டி தங்கை இருக்கும் தகவலைப் பகிர்ந்துகொண்டார். தனது தங்கைக்கு 10 வயது ஆவதாகவும் தனக்கும் தங்கைக்கும் இடையில் 16 வயது வித்தியாசம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது பெற்றோர்கள் தனக்கு எப்போதும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும் அதே நேரத்தில் தனது தங்கை மற்றும் பெற்றோர்கள் ஊடகத்தில் இருந்து விலகியே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

