TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK AIADMK Alliance: பிரசாந்த் கிஷோர் மூலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, விஜயின் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி - பிரசாந்த் கிஷோர் பேச்சு..!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தற்போதில் இருந்தே தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. திமுக தொடங்கி அதிமுக மற்று தவெக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், கடந்த முறை தேர்தலில் திமுகவிற்காக வேலை செய்த, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னை வந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து பேசினார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்க்காக பணியாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாதனதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் நேற்றே, இரவோடு இரவாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம், பிரசாந்த் கிஷோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுகவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - தவெக கூட்டணி?
பிரசாந்த் கிஷோரின் ஐபேக் போன்ற தேர்தல் வியூக அமைப்புகள், ஒரு நேரத்தில் ஒரு கட்சிக்கு மட்டுமே வேலை செய்யும். அப்படி இருக்கையில் தவெகவை தொடர்ந்து, அதிமுக உடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால், சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக, இரண்டு கட்சிகளையும் இணைக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, எடப்பாடி தரப்பிடம் பேசிய கையுடன், பிரசாந்த் கிஷோர் தவெகவின் தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த, ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகிய மூவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. விஜய் காணொலி வாயிலாக இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
துணை முதலமைச்சர் விஜய்?
சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என, அக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இரண்டு கட்சிகளும் (தவெக, அதிமுக) தங்களுக்கான அரசியல் எதிரியாக திமுகவையே நிர்ணயித்து உள்ளன. இதன் காரணமாக திமுகவை வீழ்த்த விஜய் மற்றும் எடப்பாடி, அந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் அமைத்தது போன்ற கூட்டணிய தமிழ்நாட்டில் அமைக்கலாம் என தெரிகிறது. ஏற்கனவே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக, தேர்தலில் ஒருமுறை கூட போட்டியிடாத தவெகவிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. எனவெ, தவெக தலைவர் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது. தனித்து போட்டியிட்டு வெறுங்கையுடன் நிற்பதை காட்டிலும், அதிகாரத்தை பிடித்து தனது கட்சியை வளர்த்து எதிர்காலத்திலாவது ஆட்சியை பிடிகக் வேண்டும் என நினைத்தால், விஜய் இந்த கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கக் கூடும் என கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

