Planet Parade 2025: வானில் அணிவகுக்கும் 7 கோள்கள்; 'ப்ளானெட்டரி பரேட்' காண தயாராவது எப்படி?
Planet Parade 2025: 'ப்ளானெட்டரி பரேட்' ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் 7 கோள்களை பார்ப்பது, என்ன நிகழும் ஆகியவை பற்றிய சில விளக்கங்கள்..

சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் தோற்ற வானியல் நிகழ்வு நடைபெறுகிறது. இதை பூமியில் இருந்து காண்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை இங்கே காணலாம்.
அதென்ன 'ப்ளானெட்டரி பரேட்' (Planetary Parade)?
சூரிய குடுக்பத்தில் உள்ள 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகிறது என்பது நாம் அறிந்ததே. அவை சுற்றும் வேகமும் வெவ்வேறானது. வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், அவற்றின் பாதையில் ஒன்றையொன்று சந்திப்பது, ஒரே நேர்க்கோட்டில் அணிவகுப்பது அவ்வப்போது ஏற்படும். இதை அரிதான வானியல் நிகழ்வு என்று வானியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பூமியில் இருந்து பார்க்கும்போது நேர்க்கோட்டில் இருப்பதுபோல தெரியும்.
அப்படியான வானியல் நிகழ்வு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும். இந்நிகழ்வு மீண்டும் 2024-ம் ஆண்டில்தான் நிகழும். உலகம் முழுவதும் இந்நிகழ்வை காண முடியும். இந்தியாவில் யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற 5 கோள்களை வெறும் கண்களால் காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி, 28 பிறகு, சில நாட்களுக்கும் யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற கோள்கள் தெரிய வாய்ப்பிருக்கிறது.
வெறும் கண்களால் காண முடியுமா?
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கோள்களை வெறுங்கண்ணில் காணமுடியும். சனிக்கோள் அடிவானில் இருக்கும் என்பதால் காணபது அவ்வளவு சாத்தியம் இல்லை. யுரேனஸ் நெப்டியூன் ஆகியவற்றை தொலைநோக்கி மூலம் காணலாம்.
வானியல் நிகழ்வை காண சில டிப்ஸ்:
- செவ்வாய் சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும். வெள்ளி வியாழன் பிரகாசமாக நட்சத்திர ஒளியாக மின்னும். இதையெல்லாம் காண அதிகம் வெளிச்சம் இல்லாத பகுதியை தேர்வு செய்வது நல்லது.
- மாலை 6 மணிக்குமேல் என்றால், 5.20 மணிக்கு மேல் என்றாவது சற்று முன்பே நீங்கள் வானியல் நிகழ்வை காணும் இடத்திற்கு சென்று அமர்வது நல்லது. அப்போதுதான் அந்த சூழலை பழகி, அழகிய நிகழ்வை கொண்டாட்டமாக காண முடியும்.
- வானில் நிகழும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்கள் வானியல் ஆர்வலர்கள். அதனாலேயே., நிகழ்வு நடைபெறுவதற்கு 30 நிமிடங்கள் முன்னரே அந்த இடத்திற்கு செல்வது சிறந்ததாக இருக்கும். கோளரங்கம் சென்றும் காணலாம்
- சூரியன் மறைவிற்குப் பின், இரவு வானில் அணிவகுப்பு நிகழ்வும். சனி கோள் 20 நிமிடங்கள் மட்டுமே காண இயலும். மாலை 6 மணிக்கு மேல் 45 நிமிடங்கள் வரை இந்த நிகழ்வை காண முடியுமாம். யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற கோள்களை வெறும் கண்களால் காண முடியும்.
- வானிலை குறித்த அறிவிப்புகளை தெரிந்துகொள்ளலாம். வானம் தெளிவாக இருந்தால் கோள்களை காண்பது எளிதாக இருக்கும்.
- அதிகமாக செய்ற்கை விளக்குகள் இருக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இருள் அதிகம் இருக்கும் இடத்தில் இருந்து இதை காண்பது நிகழ்வை முழுமையாக காண உதவும்.
- சிறியளவிலான தொலைநோக்கி அல்லது பைனாகுலர் ஆகியவற்றை பயன்படுத்தி பார்ப்பது சிறந்த அனுபத்தை தரும்.
- சூரியன் மறைய தொடங்கும்போதே,, கோள்களை காணலாம். சூரிய மறைந்த வெகு நேரத்திற்கெல்லாம் இவற்றை காண முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே காண முடியும் என்பதால், சூரியன் மறைந்த 30-40 நிமிடங்களுக்கள் வானில் நடப்பதை கவனிக்க தவற வேண்டாம்.
- செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து, அதற்கான நேரத்தை ஒதுக்கி காண்பது எதையும் மிஸ் செய்யாதிருக்க உதவும் எனவும் வானியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.





















