மேலும் அறிய
13 வயசில் அறிமுகம்; கிளாமரில் வேற மாறி நடித்து... தலைவரையே மிரட்டி பார்த்த இந்த நடிகை யார் தெரியுமா?
13 வயதில் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் சிறிய வயது புகைப்படம் வைரல்
1/5

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வெள்ளை மனசு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பார்த்த ஞாபகம் இல்லையோ, படிக்காதவன், முதல் வசந்தம் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த படையப்பா படம் நீலாம்பரியாக அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் அவரது ஸ்டைல், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரை வேறு ரேஞ்சுக்கு கொண்டு சென்றது.
2/5

தனது 13 வயது முதல் சினிமாவில் நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், குச்சிப்புடி ஆகிய கலைகளை கற்று தேர்ந்துள்ளார். படையப்பா படம் போன்றே தெலுங்கு சினிமாவில் வெளியான பாகுபலி ரம்யா கிருஷ்ணனுக்கு சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படம் ரசிகர்களுக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்தது.
Published at : 27 Feb 2025 10:10 PM (IST)
மேலும் படிக்க





















