Dragon: அசத்திட்டீங்க போங்க... டிராகன் படக்குழுவினருக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து!
Dragon: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் படத்தின் வெற்றியை விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து திரைக்கதை நன்றாக இருப்பதாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அனுபவமா பரமேஸ்வரன் , காயடு லோஹர் , மரியம் ஜார்ஜ் , விஜே சித்து , மிஸ்கின் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. டிராகன் படத்திற்கு திரையுல பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டிராகன்:
டிராகன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் டிராகன் படத்தை கொண்டாடி கமெண்ட் செய்து வருகின்றனர். லவ் டுடே திரைப்படத்தில் நடித்திருந்த பிரதீப் ரங்கநாதன் இதில் நடித்திருக்கிறார். டிராகன் படத்தில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். நடிப்பில் அவர் மெருகேறியிருப்பதாகவும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். படத்தின் ஹீரோ நடிப்பில் மிரட்டும் ஒரு பக்கம், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து அவர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார் என்றும் சமூக வலைதளத்தில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டிராகன் பட வசூல்
கோமாளி, லவ் டுடே ஆகிய இரு படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து கமர்சியல் ஹிட்களைப் பெற்றுள்ளார் என்று சொல்லலாம்.சுமார் ரூ 37 கோடி பட்ஜெட்டில் உருவான டிராகன் திரைப்படம் 3 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் படம் 100 கோடி வசூலை எட்டும் என்று படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளனர். அதோடு, திரையரங்குகளில் டிராகன் ஹஸ்ஃபுல்லாக இருக்கிறது.
View this post on Instagram
LIK படக்குழுவுடன் கொண்டாட்டம்:
விக்னேஷ் சிவன் இயக்கும் ’லவ் இன்சுரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Company) படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படக்குழுல், பிரதீப் ரங்கநாதன் டிராகன் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொண்டாட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,”`இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் தருணத்திற்காக நம்பிக்கையுடன் ’manifest’ செய்துக் கொண்டிருந்தோம். அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்'. பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். அவர் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும். பிளாக்பஸ்டர் திரைப்படமாக வசூல் சாதனை செய்துக் கொண்டிருக்கும் டிராகன் படத்தின் வெற்றியை `LIK' குழுவினர் உடன் கொண்டாடினோம். மக்களுக்கு தேவையான மெசேஜ் சொல்கிறது. மக்களுக்கும் பிடித்திருக்கிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உழைப்பிற்கு சாட்சியாக படம் இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் ஃபயர் பெர்பாமென்ஸைக் கொடுத்திருக்கிறார்." எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





















