JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025 Final Answer Key: 2025ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. ஜனவரி 22ஆம் தேதி நடந்த தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வின் இறுதி விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் விரைவில், அதாவது இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இறுதி விடைக் குறிப்புகள் வெளியீடு
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. ஜனவரி 22ஆம் தேதி நடந்த தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்புகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் விரைவில், அதாவது இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2025/02/2025021039.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, இறுதி விடைக் குறிப்புகளை அறியலாம்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில், JEE Main 2025 என்ற பக்கம் தோன்றும்.
* அதை க்ளிக் செய்து, தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.
* அவ்வாறு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில்: jeemain@nta.ac.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

