மேலும் அறிய
இரவுநேர தூக்கம் போரட்டமாக இருக்கிறதா? காரணங்களும் தீர்வுகளும்!
இரவு நேர மன உளைச்சலை தடுப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

இரவுநேர மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன?
1/5

ஒரு நல்ல இரவு தூக்கத்தின் மூலம்தான் நமது உடலுக்கும், மனதிற்குமான முழு ஓய்வு கிடைக்கும். ஆனால், இரவில் சரியாகத் தூங்காதவர்கள் பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். அது நீண்ட நாள் நீடித்தால் உடல் நலத்துக்குக் கேடாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, தூக்கம் மிகவும் முக்கியமானது.
2/5

சில நேரங்களில் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. அதாவது தேவையில்லாத விஷயங்களை அதிகம் மனதில் போட்டுக்கொண்டு சிந்திக்க வேண்டாம். இல்லையெனில் அவை கவலையை ஏற்படுத்தும். நாள் முழுவதும் வேலையில் அழுத்தமாக இருக்கும் போது, நாள் பல்வேறு சங்கடமான விளைவுகளுக்கு இடையே கடந்து செல்கிறது.
3/5

மன அழுத்தம் உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இப்படி கார்டிசோல் அதிகரித்தால், மன அழுத்தம் அதிகமாகி, கவலையாக மாறுகிறது. எண்ணங்கள் அதிகமாகும் போது கார்டிசோலின் அளவு அதிகரிக்கும். இரவின் தனிமையில் கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வருவதாலும், தேவையற்ற குற்ற உணர்வுகளாலும் எண்ணங்கள் உக்கிரமடைகின்றன.
4/5

கவலையில் இருக்கும் போது பணியில் கவனம் செலுத்த முடியாது. கடுமையான அமைதியின்மை துன்புறுத்த தொடங்கும்.நீண்ட நாட்களாக நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கவலை ஏற்படும் அபாயம் உள்ளது.இரவில் காஃபின், ஆல்கஹால் மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைத்து கவலையை ஏற்படுத்தும்.
5/5

தூங்கும் இடம் அல்லது படுக்கையை மாற்றலாம் உங்கள் மனதை குழப்பமான எண்ணங்களிலிருந்து திசைதிருப்ப தூங்கச் செல்லும் முன் எதையாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்..இனிமையான இசையைக் கேளுங்கள் மன அமைதியை தரலாம் மூச்சைக் கவனிப்பது மற்றும் இதயத் துடிப்பைக் கேட்பது போன்ற நமது உடலுடனான தொடர்பை அதிகரிக்கும் செயல்பாடுகளும் சிறந்த தூக்கத்தைத் தூண்டும்..
Published at : 14 Dec 2024 01:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement