Thaipusam 2025 Modi Wishes: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Thaipusam 2025 Modi Wishes: தமிழ்நாடெங்கும் தைப்பூசத் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் என்ன கூறியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தைப்பூசத் திருநாள் கோலாகலம்
தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதமாக தை மாதம் விளங்குகிறது. தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அல்லது அத்தினத்தை ஒட்டி உள்ள பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். ஆறு படை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று(11.02.25) தைப்பூசத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், மலேசியா உள்பட உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களில், தமிழ் பேசும் மக்கள் தைப்பூசத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து
இந்த தைப்பூச நன்நாளில், தமிழக மக்களுக்கு எக்ஸ் தளம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
மேலும், முகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும் எனவும், இந்த புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காகவும், நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும் என கூறியுள்ள அவர், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எனக் கூறி தனது பதிவை முடித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

