மேலும் அறிய
பால் பொருட்கள் கொண்டு செய்யப்படும் உணவுகள் முகத்தில் பரு உருவாக காரணமா?
பால், பால் சார்ந்த பொருட்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு நிபுணர்கள் அளிக்கும் பதிலை காணலாம்.

பால்
1/5

பால் காரணமாக சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வோம். பொதுவாக பருக்கள் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் போது வரும். இதற்குக் காரணம் சருமத்தில் உள்ள துளைகளில் அடைப்பு ஏற்படுவது. சருமத்தில் உள்ள எண்ணெய், சீபம் ஆகியன இறந்த செல்களுடன் சேர்ந்து சருமத்தில் அடைப்பை ஏற்படுத்தும் அந்த இடத்தில் பருக்கள் உருவாகும். இவ்வாறாக பருக்கள் உருவாகும்போது அதில் பாக்டீரியாக்கள் தோன்றும். அதனால் வலி ஏற்படும்.
2/5

க்யூட்டிபேக்டீரியம் ஆக்னே அல்லது சி ஆக்னே என்பது சிவந்து வலியை உண்டாக்கும். நாம் என்ன உண்கிறோமோ அது சருமத்தில் பிரதிபலிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் அருந்துபவர்களுக்கு பருக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
3/5

2019ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பால் அருந்துவது என்பது பருக்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் தயிர், சீஸ் ஆகியன பருக்களை ஏற்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சிகள் கூறின. ஆனால் ஓராண்டுக்கு முந்தைய ஆய்வுகளில் பால் போல் பால் சார்ந்த பிற பொருட்களினாலும் பருக்கள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4/5

எனவே நம் உணவிற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
5/5

எனவே, இந்த விசயத்தில் மருதுவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Published at : 15 Dec 2024 02:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement