கவர்ச்சி காட்டாமல் சினிமாவில் சாதித்து காட்டிய ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் கவர்ச்சியே காட்டாமல் நடித்து சாதனை படைத்த நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.

நதியா
1980ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் தான் நடிகை நதியா. 1985ஆம் ஆண்டு திரைக்கு வந்த பூவே பூச்சூடவா படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பூக்களை பறிக்காதீர்கள், மந்திர புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன் என்று ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினிகாந்த், பிரபு, மோகன், கார்த்தி, ராம்கி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்தார். இவர் நடித்த எந்த படத்திலும் துளி கூட கவர்ச்சி காட்டவில்லை. ஹீரோயினாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
சங்கீதா:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா. தளபதி விஜய் நடித்த பூவே உனக்காக படம் சங்கீதாவிற்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக பூவே உனக்காக திகழ்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் எந்த படத்திலும் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவலட்சுமி:
1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பெங்காலி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அஜித் நடித்த ஆசை படம் தான் ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகு கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், லவ் டுடே, இனியவளே, பொன்மணம் என்று குடும்பக் கதைகளை மையப்படுத்திய படங்களிலேயே நடித்தார். இவர் நடித்த பல படங்கள் அவருக்கு ஹிட் படங்களாகவே அமைந்தது. ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களில் நடிக்க மறுத்த சுவலட்சுமி வெளிநாட்டு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
சுஹாசினி:
கமல் ஹாசனின் அண்ணன் மகள் தான் சுஹாசினி. இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ரஜினிகாந்த், பிரபு, விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். தான் நடித்த எந்த படத்திலும் கவர்ச்சி காட்டாமல் நடித்துள்ளார். இவரைப் போன்று தான் இவருடைய சகோதரி அனு ஹாசன். சுஹாசினி இயக்கிய இந்திரா படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்பு வந்தாலும் ஏற்று நடிக்கவில்லை. எனினும், ஒரு சில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்துள்ளார்.
ரேவதி:
கவர்ச்சி இல்லாமல் நடித்த நடிகைகளில் முதலில் நினைவுக்கு வருவது ரேவதி. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், மோகன் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தேவயானி:
அஜித், விஜய், விக்ரம், சரத்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த தேவயானி தனது முதல் படமான தொட்டா சிணுங்கி படத்தில் கவர்ச்சி ரோலில் நடித்திருந்தாலும் அதன் பிறகு எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை.
ஷாலினி:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்திலிருந்து எப்போது குடும்ப கதைகளை மையப்படுத்திய படங்களில் நடித்தவர் நடிகை ஷாலினி. விஜய், அஜித், மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இவர் நடித்த அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் எல்லாமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அஜித்தை காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.
சாய் பல்லவி:
இன்றும் மலர் டீச்சராகவே ரசிகர்களால் ரசிக்கப்படுபவர் தான் சாய்பல்லவி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் மற்றும் தண்டேல் ஆகிய இரு படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. எந்த படமாக இருந்தாலும் சரி கவர்ச்சிக்கு மட்டும் நோ சொல்லி நடிக்க கூடியவர் என்றால் அது சாய் பல்லவி தான். இதுவரையில் அவர் நடித்த படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்துள்ளார்.





















