மேலும் அறிய
Fried Rice Syndrome : அடிக்கடி வெளியே ஃப்ரைட் ரைஸ் வாங்கி சாப்பிடுபவரா நீங்கள்? இதை கண்டிப்பாக படிங்க!
Fried Rice Syndrome : தெருக்கு ஒரு ஃப்ரைட் ரைஸ் கடையை பார்த்துவிடும் அளவிற்கு, ஃப்ரைட் ரைஸ் மீதான பிரியம் வளர்ந்து கொண்டே போகிறது.

ஃப்ரைட் ரைஸ்
1/6

நம்மில் பலருக்கு தெருக்களில் விற்கப்படும் ஃப்ரைட் ரைஸ், பிடித்தமான உணவாக இருக்கிறது. சிலர் அதை வாரத்தில் 2-3 முறை சாப்பிடுவார்கள்.
2/6

இதை அடிக்கடி சாப்பிட்டால் “ஃப்ரைட் ரைஸ் சின்ட்ரோம்” (Fried Rice Syndrome) ஏற்படலாம். இதனால் வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
3/6

"Bacillus Cereus" என்ற கிரிமியால் இது ஏற்படுகிறது. இந்து கிருமி, ஸ்டார்ச் (Starch) கொண்ட சாதத்தை வெளியே நீண்ட நேரம் வைக்கும் போது வளர்கிறது. இது ஸ்போர்ஸ் (Spores) என்பதை உற்பத்தி செய்யும். வெளியே இருக்கும் சாதத்தை தீயில் கிளறி எடுத்தாலும் இது அழியாது.
4/6

இந்த ஸ்போர்ஸ் வயிற்றுக்குள் செல்லும் போதும் டாக்சினாக (Toxin) மாறுகிறது. இந்த டாக்சினால் வாந்தி ஏற்படும். அதிகமாக வாந்தி வந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 1-6 மணி நேரத்திற்குள் இது போல் ஆகலாம்.
5/6

அதற்குள் மருத்துவரை அணுகினால் பிரச்சினை தீர்ந்து விடும். அப்படியே விட்டுவிட்டால், வயதானவர்களும் குழந்தைகளுக்கும் சிறுநீரக சேதம், உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
6/6

ஃப்ரைட் ரைஸ் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷாக செய்து சாப்பிடுங்கள். வெளியே வாங்கி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Published at : 09 Jun 2024 11:17 AM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
சென்னை
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion