Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியிடம் சிக்கிய டூப்ளிகேட் கார்த்திக்.. இளையராஜா தப்பியது எப்படி?
கார்த்திகை தீபம் சீரியலில் ஹோட்டலில் போலி கார்த்தியாக நடித்த இளையராஜா சாமுண்டீஸ்வரியிடம் சிக்கிக்கொள்ள அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடர்களில் கார்த்திகை தீபமும் ஒன்றாகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சந்திரகலா ப்ளானை முறியடித்த கார்த்திக்:
இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் மீட்டிங்கிற்கு தயாராக, சந்திரகலா சாமுண்டீஸ்வரியை இந்த மீட்டிங்கில் பங்கேற்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சந்திரகலாவின் திட்டம் மயில்வாகனத்திற்கு தெரிய வர அவன் கார்த்தியிடம் சொல்ல, கார்த்தி ஒரு திட்டத்தைச் சொல்லி சந்திர கலாவின் பிளானை முறியடிக்கிறான். இதையடுத்து, சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அதே ஹோட்டலில் இளையராஜா சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருக்க, இளையராஜாவைப் பார்த்து இவர்கள் பார்த்து ஷாக் ஆகின்றனர்.
சமாளிக்கும் இளையராஜா:
அவனை பிடித்து நீ ராஜ சேதுபதியின் பேரன் தானே என்று மிரட்ட இளையராஜா நான் இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறான்.
அதன் பிறகு இருவரும் வெளியே வர இளையராஜா போலவே இன்னொருவன் அங்கிருக்க குழப்பம் அடைகின்றனர். இளையராஜா சாமுண்டீஸ்வரியை பார்த்து என்ன அத்த இங்க என்ன பண்றீங்க என்று பேசுகிறான்.
மைதிலியை கடத்திய ரவுடிகள்:
மறுபக்கம் கோவிலில் தீ மிதிக்க ஏற்பாடுகள் நடக்க, காளியம்மா சொன்னதெல்லாம் ரெடியா என்று ரவுடிகளிடம் கேட்கிறாள். பிறகு முத்துவேல் மைதிலியை கடத்த ஜானகி கார்த்திக்கிற்கு தகவல் கொடுக்கிறாள்.
இந்த பரபரப்பான சூழலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.





















