மேலும் அறிய

Chennai Metro Extension : இனி எல்லாமே மெட்ரோ தான்... போக்குவரத்து நெரிசலுக்கு டாடா! சென்னை மெட்ரோ விரிவாக்கம்: புதிய வழித்தடங்கள்

Chennai Metro Extension: இந்த இரண்டு திட்டங்களுக்கான DPR தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தம் M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் லிமிட்டெட் (CMRL), நகர போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய வழித்தட விரிவாக்கங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம்:

1. வழித்தடம் 4 நீட்டிப்பு – கலங்கரை விளக்கம் மெட்ரோ → உயர்நீதிமன்றம் மெட்ரோ

மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்துக்கு மெட்ரோ இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், சுமார் 7 கிலோமீட்டர் நீளத்தில் இந்த நீட்டிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எளிதான வகையில் பயணத்தை மேற்க்கொள்ளும் வகையிலும், நகர போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் இது அமையும்.

2. தாம்பரம்–கிண்டி–வேளச்சேரி வழித்தடம்

அடுத்ததாக சுமார் 21 கிலோமீட்டர்  நீளமுள்ள இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ இரயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடம், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.

ஒப்பந்த விவரங்கள்

இந்த இரண்டு திட்டங்களுக்கான DPR தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தம் M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

  • வழித்தடம் 4 நீட்டிப்பு – ரூ.38,20,000

  • தாம்பரம்–வேளச்சேரி – ரூ.96,19,000
    DPR சமர்ப்பிக்கும் காலவரையறை – 120 நாட்கள்.

சென்னை மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப. அவர்களின் முன்னிலையில், CMRL திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் மற்றும் Systra MVA உயர் துணைத் தலைவர் பர்வீன் குமார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், தலைமை பொது மேலாளர்கள் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல்/வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்டமிடல்/வடிவமைப்பு), டாக்டர் டி. ஜெபசெல்வின்கிளாட்சன் (ஒப்பந்தம்/கொள்முதல்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய விரிவாக்கத் திட்டங்கள்

சென்னை மெட்ரோ கடந்த ஆண்டுகளில் பல முக்கிய விரிவாக்கங்களை மேற்கொண்டது.

  • மெட்ரோ வழித்தடம் 3 – மதவரம் → சோழிங்கநல்லூர் (45.8 கி.மீ, 50-க்கும் மேற்பட்ட நிலையங்கள்) தற்போது கட்டுமானத்தில்.

  • மெட்ரோ வழித்தடம் 5 – மயிலாப்பூர் → சோழிங்கநல்லூர் பகுதி விரிவாக்கம்.

  • வழித்தடம் 1 நீட்டிப்பு – வண்ணாரப்பேட்டை → விமானநிலையம் இணைப்பு, விமானப் பயணிகளுக்கு வசதி.

இந்தப் புதிய DPR-கள், வழித்தட பாதைகள், பயணிகள் எண்ணிக்கை, போக்குவரத்து ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை விரிவாக மதிப்பீடு செய்யும். எதிர்கால திட்ட அமலாக்கத்திற்கான துல்லியமான தகவல் ஆதாரமாகவும் செயல்படும்.

சென்னை மெட்ரோ, வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நிலையான மற்றும் எதிர்கால நோக்குடன் நகரப் பொதுப் போக்குவரத்துத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Embed widget