மேலும் அறிய

ஆவணி மாத ராசி பலன்

ஆவணி மாதம் 1  To  15  ராசி பலன் : மேஷம் முதல் கடகம் வரை எனக்கு அன்பான Abp நாடு வாசகர்களே வருகின்ற ஆவணி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்...

ஆவணி மாதம் 1  To  15  ராசி பலன் :


 மேஷம் முதல் கடகம் வரை 


எனக்கு அன்பான Abp நாடு வாசகர்களே வருகின்ற ஆவணி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்... சிம்மத்தில் சொந்த வீட்டில் பிரவேசிக்கும் சூரியன் 15 நாட்களுக்கு உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்...


 மேஷ ராசி :


 அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் ஆட்சி வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கேது அந்த அமர்ந்திருக்க நல்ல ஞானத்தையும் அறிவையும் மற்றவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற போதனையும் கொடுத்த இருப்பார்... முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே புத்திரர்கள் வழியில் நல்ல விசேஷமான தகவல்கள் வரும், அவர்கள் வழியில் பெயர் புகழ் கிடைக்கும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலம்... குலதெய்வ வழிபாடு உங்களுக்கு மிக பெரிய சக்தியை கொண்டு வரும்... அதிகமான கடன் இருப்பவர்களுக்கு அடைய வாய்ப்பு உண்டு . வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படலாம் கவலை வேண்டாம் கோதுமையை அதிகமாக பயன்படுத்துங்கள்.. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு.. அதிர்ஷ்டமான எண் 1,6,9...


 ரிஷப ராசி:

 அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு நாலாம் இடத்தில் சூரியன் ஒரு சரியான வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு இது ஏற்ற காலம்... தாயாரை பிரிந்து இருப்பவர்கள் அவர்களை புரிந்துகொள்ள ஏற்ற காலம்.... குடும்பத்தோடு நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புண்டு... வண்டி வாகனங்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்வீர்கள்... இடம் விட்டு இடம் போவது மனதிற்கு அமைதியை கொண்டு வரும்.... காலையிலிருந்து சூரிய நமஸ்காரம் செய்தால் பிடித்திருக்கின்ற தோஷங்கள் விலகும்.... வீட்டு பூஜை அறையில் விநாயகரை வைத்து வழிபடுங்கள் சங்கடங்களை தீர்த்து வைப்பார்.... தொழில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்... ஆனால் தொழில் ரீதியாக புதிய இடங்கள், கடைகள் போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையும்... அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை... அதிர்ஷ்டமான எண்கள் 2,6,9..


 மிதுன ராசி:

 அன்பார்ந்த மிதுன ராசி அன்பர்களே தைரியமாக பேசக்கூடிய காலம் வந்துவிட்டது... மற்றவர்களுக்கெல்லாம் சிறப்பாக நடக்கிறது எனக்கு மட்டும் ஏன்?இப்படி என்று சிந்திக்கும் காலம் விரைவில் போகும்.. உங்கள் பேச்சு எல்லா இடத்திலும் மதிப்பை கொண்டு வரும்.. சகோதரர்களின்  ஆதரவு கிடைக்கும்... பின் வாங்கிய காரியங்களில் வெற்றி உண்டாகும் பத்தாம் இடத்தில் இருந்த சனி வக்கிரம் பெற்றதால், புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு... வேலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்... எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு சாதிப்பது வெகு தொலைவில் இல்லை.... திருமண பேச்சுக்கான நேரம் தான் இது... பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போட்ட காரியங்கள் வரைந்து முடிக்கலாம் என்று புறப்படுவீர்கள்...


 கடக ராசி :

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே இரண்டாம் வீட்டில் சூரியன் அமர்ந்து பேச்சில் ஒளி கொடுக்கிறார்.... நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த நண்பர்களை சந்திக்க வாய்ப்புண்டு.... குடும்பத்தைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் கூட தற்பொழுது அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள்.. ரத்த சம்பந்தமான உறவுகள் உங்களை தேடி வரும் அல்லது நீங்கள் தேடிப் போவீர்கள்... இத்தனை நாட்களாக தனிமையில் இருந்த உங்களுக்கு இத்தனை பேர் என்னுடன் இருக்கிறார்களா என்ற சூழ்நிலையை உருவாக்கும் இரண்டாம் இட சூரியன்... சனி வக்கிரம் அடைந்து அஷ்டமத்தில் வருவதால் பயப்படத் தேவையில்லை . நீண்ட தூரம் பிரயாணங்களை மேற்கொள்வதன் மூலம் சனி கொடுக்கக்கூடிய தொல்லையிலிருந்தும் 12ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குருவின் ஆதிக்கத்தில் இருந்து  தப்பித்துக் கொள்ளலாம்.... இயற்கையாகவே உங்களுக்கு பயணங்கள் அமைந்து விட்டதென்றால் பரவாயில்லை... பிடித்த அம்மனை வழிபடுங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுங்கள் அனுகூலமான நிறம் மஞ்சள் அதிர்ஷ்டமான எண்கள் 1,2,5....

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (11-10-2026): நவராத்திரி முதல் நாள்.. கடகத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு அதிர்ஷ்டமா?
Rasi Palan Today (11-10-2026): நவராத்திரி முதல் நாள்.. கடகத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு அதிர்ஷ்டமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget