மேலும் அறிய
Sengalam Web Series Review : நம்ம ஊரின் அரசியல் நிகழ்வுகளை கண்முன் காட்டிய செங்களம் வெப் சீரிஸ்..எப்படி இருக்கு வாணி போஜனின் புது அவதாரம்?
Sengalam Web Series Review: எஸ்.ஆர் பிரபாகரனின் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் தொடரின் குட்டி விமர்சனம் இங்கே..

செங்களம் வெப் சீரிஸ் விமர்சனம்
1/6

கதையின் கரு : நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆசைப்படும் அரசியல் ஓநாய்கள்…3 கொலைகளை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் அண்ணன் தம்பிகள், இன்னும் 2 கொலை செய்ய உள்ளதாக போலீசிடமே சவால் விடுகின்றனர்..யார் இவர்கள்? நகராட்சி மன்ற தலைவர் சீட்டிற்கும் இவர்கள் செய்யும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்? விவரிக்கிறது செங்களம் தொடர்
2/6

செங்களம் தொடர், முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை, “அன்று ஒரு நாள்” “இன்று” என ஃப்ளேஷ்பேக்கிலும் நிகழ் காலத்திலும் பயணிப்பது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது. கதையின் முதல் நான்கு எபிசோடுகள் திருமணம், மரணம், கொலை என பயணிப்பதால் வேகமாகச்செல்கிறது
3/6

இதையடுத்து வரும் எபிசோடுகிளில் அரசியல் ஆதாயங்கள், பதவி ஆசை, அதற்காக செய்யப்படும் குற்றச்செயல்கள் என காண்பிக்கப்படுகின்றன. இதனால், 6ஆவது எபிசோடு வரை செங்கலம் எந்த வித வேக தடையுமின்றி ஹை ஸ்பீடில் செல்கிறது
4/6

வாணி போஜனின் அரசியல் ஆசைக்குப்பின்னர், கதை சூடு பிடிக்கும் என்று பார்த்தால் அதற்கு அப்படியே நேர்மாறாக ரசிகர்களை தொய்வடையச் செய்கிறது. தொடரில், தமிழ்நாட்டின் அரசியலை ஆங்காங்கே குறியீடுகளாக வைத்துள்ளது, ரசிகர்களை ஈர்த்துள்ளது
5/6

இத்தொடரில் கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா, விஜி சந்திரசேகர்போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர். அவர்களின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப அனைவருக்கும் சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும், தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற பணியை செவ்வனே செய்து கொடுத்திருக்கின்றனர்
6/6

மொத்தத்தில், கொஞ்சம் பொறுமையாக பார்த்தால், கடந்த 30 வருடங்களில் நம்ம ஊரில் நடைப்பெற்ற அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறது செங்களம் தொடர்
Published at : 24 Mar 2023 12:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion