April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதி முதலாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.

மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த தினங்களில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது? இதோ விரிவாகப் பார்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ஆண்டுத் தேர்வு
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.
குறிப்பாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.9 முதல் 21 ஆம் தேதி வரை காலை வேளையில் முழு ஆண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மதிய வேளையில் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதி முதலாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.
பொது விடுமுறை எப்போது?
தேர்வுக்கு இடையே பொது விடுமுறை தினங்களும் அறிவிகப்பட்டுள்ளன. இதன்படி, கீழே உள்ள தினங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14 (திங்கள்)
- புனித வெள்ளி: ஏப்ரல் 18 (வெள்ளி)
கோடை விடுமுறை எப்போது?
- 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு: ஏப்ரல் 22 முதல் (செவ்வாய்க் கிழமை)
- 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு: ஏப்ரல் 25 முதல் (வெள்ளிக் கிழமை)
ஆகிய தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

