Solar Eclipse: பகலில் மறையும் சூரியன்.! வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: எப்போது?
Solar Eclipse In India: 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழவுள்ள நிலையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி முதல் சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

Solar Eclipse 2025 Timing And Day 2025 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்வுள்ளது. இந்நிலையில், சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது, எந்த நேரத்தில் நிகழவுள்ளது, இந்தியாவில் தெரியுமா மற்றும் வெறும் கண்ணால் பார்க்க முடியுமா என்பது குறித்தான தகவலை பார்ப்போம்.
சூரிய கிரகணம்:
2025 ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழ உள்ளன. அதில் முதல் சூரிய கிரகணமானது, வரும் மார்ச் 29 ஆம் தேதி நிகழ உள்ளது. இதில் வானியலின் ஆச்சரியமிக்க நிகழ்வு என்னவென்றால், சில தினங்களுக்கு முன்பு மார்ச் 14 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது என்பதுதான்.
சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் நிலாவும் பூமியைச் சுற்றிக் கொண்டே, சூரியனையும் சுற்றி வருகிறது. இவ்வாறு, சூரியன் , பூமி மற்றும் நிலா ஆகிய மூன்றும் சுற்றி வருகையில் , இருப்பிடத்திற்கு ஏற்ப வகையில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
கிரகணத்தை பொறுத்தவரையில், மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் நிலா வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும்.
கிரகணம் எப்போது?
இந்த நிகழ்வானது, வரும் மார்ச் 29 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமானது, இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி முதல் மாலை 6. 13 மணிவரை நிகழும் எனவும், மாலை 5.73 மணி அளவில் அதிகமாக இருக்கும் எனவும் Timeanddate என்ற இணையதள பக்கம் தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணமும் உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் எனவும், இந்தியாவில் தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும். மேலும், வட அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது நிகழும் என்பதால், சிறந்த பார்வை அனுபவத்தை பெறலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
Also Read: சுனிதா வில்லியம்ஸ் திரும்பியதற்கு டிரம்ப்தான் காரணமா? வெடிக்கும் அரசியல்..உண்மை என்ன?
Also Read: Lunar Eclipse: சிவப்பாக மாறப்போகும் இரவு: வருடத்தின் முதல் சந்திர கிரகணம்: எப்போது?
அறிவியலாளர்கள் அறிவுறுத்தல்:
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது பாதுகாப்பானது இல்லை என அறிவியலாளர்கள் அறிவுறுத்தல்கள் செய்கின்றன. சூரிய கிரகணத்தை நேரடியாகப் வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம் என்றும் அதற்கென தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடி கொண்டு பார்ப்பது உகந்தது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த சூரிய கிரகணமானது வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி நிகழும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த சூரிய கிரகணம் பகுதியில் இருக்கும் மக்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் பார்த்து மகிழுங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

