மேலும் அறிய

Gold Rate: அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...

Gold Rate New Peak: தங்கத்தின் விலை இனி குறையவே குறையாதோ என்று மக்கள் பயந்ததற்கு ஏற்றார்போல், இன்றும் விலை உயர்ந்துள்ள தங்கம், புதிய வரலாற்று உச்ச விலையை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ள நிலையில், 67 ரூபாயை நெருங்கியுள்ளதால், பொதுமக்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.

அடிக்கடி உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், அதில் பெரும்பாலும் உயர்வையே சந்தித்து வருகிறது தங்கம். இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 24-ம் தேதி, தங்கத்தின் விலை கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து 8,215 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 65,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 25-ம் தேதி கிராமிற்கு 30 ரூபாய் குறைந்து ,185 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 65,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதைத் தொடர்ந்து ஏறுமுகத்திற்கு மாறிய தங்கத்தின் விலை, 26-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, 8,195 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 65,560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 27-ம் தேதி கிராமிற்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 8,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 65,880 ரூபாய்க்கும் விற்பனையாது.

தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்தது. இதையடுத்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை புதிய உச்சமாக 8,340 ரூபாயை தொட்டது. அதன்படி, சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் வரலாற்று உச்சமாக, 66,720 ரூபாயை எட்டியது.

இந்நிலையில், அந்த வரலாற்று உச்சத்தையும் தற்போது கடந்து, புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது தங்கம். அதன்படி, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 20 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சமாக 8,360 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சமாக 66,880 ரூபாயை எட்டியுள்ளது.

ஆறுதல் பரிசுபோல் ரூ.1 குறைந்த வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அதற்கு ஆறுதல் பரிசுபோல், உச்சத்தில் இருந்த வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை கடந்த 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதிவரை, ஒரு கிராம் 110 ரூபாய் என்ற ஒரே விலையில் நீடித்து வந்தது. அதன்பின்னர், 26-ம் தேதி ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 111 ரூபாய்க்கு விற்பனையானது. 27-ம் தேதியும் அதே விலையில் நீடித்த வெள்ளியின் விலை, நேற்று ஒரே நாளில் கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, நேற்று ஒரு கிராம் வெள்ளி விலை 114 ரூபாயாக உயர்ந்து, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து 113 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது.

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை தற்போது 67,000 ரூபாயை நெருங்கியுள்ளதால், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை இனி குறையவே குறையாது என்று அவர்கள் பயந்தபடியே தற்போது ஆகிவிட்டதாக புலம்புகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget