MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
இன்றைய ஐபிஎல் போட்டியில் சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் ஆகிய மூவரும் சிறப்பாக விளையாடினர். மும்பை அணி சார்பில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியாக விளையாடி 196 ரன்களை குவித்துள்ளது. குறிப்பாக, சுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன் ஆகிய மூவரும் சிறப்பாக விளையாடினர். மும்பை அணி சார்பில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசினார்.
கில் பாய்ஸ் vs பல்தான்ஸ்:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று, பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று நடந்த 9ஆவது போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் பலப்பரீட்சை நடத்தியது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டி மூலம் மீண்டும் மும்பை அணிக்கு திரும்புனார். குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய கில் 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர், சுதர்சன் உடன் ஜோடி சேர்ந்த பட்லர், மும்பை பவுலர்கள் வீசிய பந்தினை நாலா புறமும் சிதறடித்தார்.
சாத்தி எடுத்த சுதர்சன்:
24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த பட்லர், முஜீப் உர் ரஹ்மான் வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இருப்பினும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுதர்சன் 63 ரன்கள் எடுத்து, தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில், 8 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 200 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணி சார்பில் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது மும்பை அணி.
இதையும் படிக்க: IPL 2025 KKR vs LSG : பாதுக்காப்பு பிரச்னை.. மாறிய முக்கிய ஐபிஎல் போட்டியின் தேதி..முழு காரணம் என்ன?

