மேலும் அறிய
Siren Movie Review : கைதியாக ஜெயம் ரவி..போலீஸாக கீர்த்தி சுரேஷ்..எப்படி இருக்கு சைரன் திரைப்படம்?
Siren Movie Review : நடிகர் ஜெயம் ரவி கைதியாக நடித்துள்ள சைரன் படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
சைரன் திரைப்படம்
1/6

அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி,கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் சைரன்.
2/6

செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வெளியாகிறார்.
3/6

வெளியே வந்த அவர் தனது சிறை தண்டனைக்கு காரணமானவர்களை பழி வாங்க வேண்டும் என நினைக்கிறார். இவரது முயற்சி வெற்றி பெற்றதா? ஜெயம் ரவி தான் குற்றவாளி இல்லை என்பதை நிருபித்தாரா? என்பதே திரைப்படம்.
4/6

நடுத்தர வயது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் ஜெயம் ரவி. ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒட்டாமல் ஒட்டுகிறார் கீர்த்தி. மொத்தத்தில் நடிகர்களின் நடிப்பு பெரிதாக சொல்லி கொள்ளும்படி இல்லை என்றே சொல்ல வேண்டும்.
5/6

ஜி.வி. பிரகாஷின் பாடல்களும் பின்னனி இசையும் ஒத்துப்போகின்றது.
6/6

மொத்தத்தில் இயக்குநர் சில ஓட்டைகளை மட்டும் சரி செய்திருந்தால் முதல் படமே அவருக்கு சிறப்பான படமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை.
Published at : 16 Feb 2024 01:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















