Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா
அரசியல் எதிரிகளாக உருவெடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் இருவரும், கடைசியாக ஒருமுறை சினிமாவிலும் நேருக்கு நேர் மோதி பார்க்க முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு முன் வரும் பொங்கல் ரேஸில் விஜய் உதயநிதி இருவரும் களமிறங்க உள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள உச்ச நடிகர் விஜய். சினிமா வாழ்க்கையில் பீக்கில் இருக்கும் நேரத்தில் சினிமாவை ஓரம்கட்டிவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்குவதாக அவர் அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கியது. இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசி திரைப்படம் ஜனநாயகன். ஹச் வினோத் இயக்கத்தில் ப்யூர் அரசியல் திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையிலும் கடைசி திரைப்படம் அரசியல் பேசும் படமாகவும்..ஒட்டுமொத்தமாக விஜய்யின் அரசியலுக்கு உதவும் கருவியாகவே ஜனநாயகன் திரைப்படம் வரவுள்ளது. கடைசி பாலில் சிக்ஸர் அடித்து மேட்சில் வெற்றி பெறுவாரா விஜய் என ரசிகர்களும் தவெக தொண்டர்களும் ஆவலுடன் உள்ள நிலையில், விஜய்யின் அரசியல் எதிரியான திமுகவின் அடுத்த வாரிசான உதயநிதியும் விஜய்யின் பொங்கல் ரேஸில் போட்டியிட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸாகும் அதே நேரத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக பிக்ஷாட்களின் படம் வெளியாகும் நேரத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவர். ஆனால் ஜனநாயகன் வருகிறது என்று தெரிந்தும் சிவாவை ரேஸில் இறக்கிவிட்டது ஏன் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் தான் இது சிவாவுக்கு போட்ட ஸ்கெட்ச் அல்ல.. பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது. பராசக்தியும் அரசியல் நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்கின்றனர். எனவே விஜய்யின் ப்ளானை டம்மி பண்ண உதயநிதி ஸ்டாலின் தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
நீங்க மட்டும் தான் படத்தை வச்சு அரசியல் செய்வீங்களா? நாங்க பண்ண மாட்டோமா என தீவிர போட்டியுடன் விஜயை எதிர்க்க உதயநிதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















