"இறைவனிடம் கையேந்துங்கள்"- உருகிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திமுகவின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரமலான் வாழ்த்துகள் தெரிவித்து உரையாற்றினார்.

இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இறைவனிடம் கையேந்துங்கள் என்று உருக்கமாகப் பாட்டு பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திமுக திருச்சி (தெ) மாவட்டக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரமலான் வாழ்த்துகள் தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, திருச்சி (கி) மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், இஸ்லாமிய பெருமக்களும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
1920-களில் தொடங்கிய மரபு
’’இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் திராவிட இயக்கத்தின் மரபு 1920-களில் தொடங்கி இன்று வரையிலும் தொடர்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 29, 2025
திருச்சி(தெ) மாவட்டக் கழகத்தின் சார்பாக எனது #திருவெறும்பூர் தொகுதியில் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது.
“இறைவனிடம் கையேந்துங்கள்…’ என்று பாடிய குரல்தான் ‘அழைக்கிறார் அண்ணா அழைக்கிறார்… ஓடி வருகிறான் உதயசூரியன்… கல்லக்குடி… pic.twitter.com/zaZNNpc1nc
திராவிட குரலாகவும் ஒலித்தது
‘இறைவனிடம் கையேந்துங்கள்…அவர் இல்லையென்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள். அவர் பொக்கிஷத்தை மூடுவதில்லை’ என்று பாடிய குரல்தான், ‘அழைக்கிறார் அண்ணா அழைக்கிறார்…‘, இந்தக் குரல்தான், ’ஓடி வருகிறான் உதயசூரியன்’… ’கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…’ எனும் திராவிட குரலாகவும் ஒலித்தது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அடுத்தவர் வீட்டுக்குள் ஏன் சார் எட்டிப்பார்க்கீறீர்கள்?’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.

