மேலும் அறிய
Vijayakanth : தமிழ் திரையுலகில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய கிங் மேக்கர் விஜயகாந்த்..!
Vijayakanth : தமிழ் சினிமாவின் புரட்சி கலைஞர் என அழைக்கப்படும் விஜயகாந்த், தான் திரையுலகில் சாதித்தது மட்டுமல்லாமல் பல நடிகர்களுக்கு ஏணியாய் இருந்து தூக்கி விட்டிருகிறார்.
கேப்டன் விஜயகாந்த்
1/7

தற்போது தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜயை செந்தூர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார் விஜயகாந்த். இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.
2/7

நடிகர் சூர்யாவை பெரியண்ணா திரைப்படத்தின் மூலம் கைத்தூக்கிவிட்டார் விஜயகாந்த்.
3/7

நடிகர் அருண் பாண்டியனை தேவன் படம் மூலம் திரையுலகில் ஜொலிக்க செய்தார் விஜயகாந்த்.
4/7

நடிகர் ராம்கியை செந்தூரப்பூவே திரைப்படத்தின் மூலம் திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க செய்தார்.
5/7

நடிகர் சரத்குமாரை புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் செய்து அவரை கைத்தூக்கிவிட்டார்.
6/7

தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி திரைப்படத்தில் நடித்து உதவி செய்தார்.
7/7

மேலும் ஆனந்த்ராஜ், பொன்னம்பலம், ஸ்ரீமன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருந்து செயல்பட்டவர் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 28 Dec 2023 06:37 PM (IST)
மேலும் படிக்க





















