உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
USA Election Result 2024: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலின் வாக்குப்பதிவானது தற்போது தொடங்கியுள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது, தற்போது அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 6 மணி என்பது குறிப்பிடத்தக்கது. ( இந்தியாவில் 4. 30 மணி, = அமெரிக்காவில் காலை 6 மணி )
அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை அறிய, உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் வாக்களிக்க மொத்தம் 18.65 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஏற்கனவே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவை பெறுபவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த சில தேர்தல்களில் இல்லாத அளவில், இந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.
ஸ்விங் மாநிலங்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அடிப்படையில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களை பெரும்பாலும் மூன்று வகைகளாக, சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் மற்றும் ஸ்விங் மாநிலங்கள் என பிரிக்கலாம்.
1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள், அதே சமயம் 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களை நீல மாநிலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் ஸ்விங் மாநிலங்கள் , ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளை மாற்றி மாற்றி செலுத்தி வருகின்றனர்.
ஆகையால், யாருக்குச் சொந்தம் இல்லாதவையாகவும், தேர்தலை முடிவை நிர்ணயிக்கும் காரணிகளாக, 7 ஸ்விங்க் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள்தான் ஸ்விங் மாநிலங்களாகும்.
இந்த 7 மாநிலங்கள்தான் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில் நாளை காலை 6. 30 மணி நேரம் வரை வாக்குப்பதிவு இருக்கும் .
தேர்தல் முடிவுகள்:
தேர்தலானது நிறைவு பெற்ற உடனேயே, வாக்கு எண்ணிக்கையானது தொடங்கிவிடும், ஆகையால், இந்திய நேரப்படி நாளை மாலையே முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை , தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், ஓரிரு நாட்கள் அதிகமாக ஆகலாம என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரீஸ் களம் காண்கிறார், குடியரசு கட்சி சார்பாக , முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார். இருவருக்குமிடையிலான போட்டியானது , கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.