மேலும் அறிய
World Heritage Week 2024: உலக பாரம்பரிய வார கொண்டாட்டம் - எப்படி உருவானது?
World Heritage Week 2024:நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25- ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.

உலக பாரம்பரிய வாரம்
1/5

ஓவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 25- ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை கொண்டாடும் விதமாக மாமல்லபுரம் மற்றும் திருமலை நாயக்கர் மஹாலை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை இலவசமாக பார்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2/5

உலகின் பல்வேறு பகுதிகளின் மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இது ஒரு வார கால திருவிழாவாகும். உலக பாரம்பரிய வாரம் யுனெஸ்கோ மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் உருவாக்கட்டடது. இந்தியாவில் இந்த விழா இந்திய தொல்லியல் துறையால் கொண்டாடப்படுகிறது.
3/5

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அங்கீகரித்த பாரம்பரிய தளங்களை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடுகிறது. உலக பாரம்பரிய தளங்கள் என்பது கலாச்சார, வரலாற்று, அறிவியல் அல்லது பிற முக்கியத்துவத்தை கொண்ட இடங்கள் அல்லது நினைவுச்சின்னங்கள், எனவே, இந்த பொக்கிஷங்களைப் பாதுகாத்து அவை நமது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நிலைத்திருப்பதை உறுதி செய்வது நமது பொறுப்பு என்பதன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4/5

இந்தாண்டின் கருப்பொருளாக “Discover and Experience Diversity.” என்பதை Archaeological Survey of India (ASI) அறிவித்துள்ளது. இது 1945-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறை 3,650 பழங்கால நினைவுச் சின்னங்கள், பாரம்பரியமிக்க இடங்களை பாதுகாத்து வருகிறது.
5/5

இந்த பாரம்பரியமிக்க வாரத்தை கொண்டாட இந்தியாவில் உள்ள வரலாற்று, பாரம்பரிய கலாச்சார மிக்க இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Published at : 19 Nov 2024 03:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion