Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Rain Updates: சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ அளவு மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன? Chennai Rain Updates Today And Tomorrow Forecasts Fog Also There In morning Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/27/266b95a07b6e9c133575afea3ce6a9431735304495168572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னயில் நேற்று பகல் பொழுதில் வெயில் இருந்தது. ஆனால், நள்ளிரவு திடீரென் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் , சிறிது நேரம் மழைநீரும் தேங்கியது. இந்நிலையில், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை வானிலை :
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செய்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ அளவு மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு வானிலை மையம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
இன்றைய வானிலை:
தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28:12-2024 மற்றும் 29 -12 -2024:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
30-12-2024 ல் 31-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01:01:2025:
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Also Read; New Year Rain: புத்தாண்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன?
02-01-2025.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)