மேலும் அறிய
Advertisement
மாசிக்கருவாட்டை இலங்கையில் இறக்குமதி செய்ய தடை - தமிழக மீனவர்கள் பரிதவிப்பு...!
தமிழகத்தில் கிலோவுக்கு 1500 வரை விற்கப்படும் மாசிக்கருவாடு இலங்கையில் கிலோ ஒன்றிற்கு 15,000 வரை விற்பனையாகி கொண்டிருந்தது.
தென் தமிழகத்தின் கடலோர மாவட்டமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் பிரதானமான ஒன்றாக விளங்குகிறது. இதன் சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களில் ஆயிரக்கணக்காணோர் ஈடுபட்டுள்ளனர். அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், வருவாய்க்காகவும் தயாரிக்கப்படும் மாசிக் கருவாடு தயாரிப்பில் மீனவர்கள் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் சூரை மீன் இத்தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் சூரை மீன்கள் கழுவி சுத்தம் செய்யப்பட்டு அதனுள் இருக்கும் குடல் உள்ளிட்டவை அகற்றப்படுகிறது. பின்னர் அவற்றை நன்றாக அவித்து தண்ணீரை இறுத்தி ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வெயிலில் உலர்த்தப்படுகிறது. மீன்கள் பாறை போல் கடினத்தன்மைக்கு மாறும் வரை காய வைக்கப்பட்டு மாசிக்கருவாடு தயாரிக்கப்படுகிறது.
இப்படி தயாரிக்கப்பட்ட மாசி கருவாட்டை பேக்கிங் செய்தோ அல்லது டின்களில் அடைத்தோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சூரை மீன்பிடித்தொழில் நசிந்து வருவதால் மாசிக்கருவாடு உற்பத்தியும் நலிவை சந்தித்து வருகிறது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மாசி கருவாடு தற்போது பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் மாசி ஒரு கிலோவுக்கு 800 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாசி கருவாட்டுக்கு இலங்கை, மாலத்தீவு, இலட்சத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் தற்போது மாசி கருவாடு கிலோவுக்கு 15000 முதல் விலை அதிகரித்து உள்ளது.
மாசி கருவாடு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள ஞானராஜ் என்பவர் கூறுகையில், சூரை மீன்பாடு குறைவு உள்ளிட்ட காரணங்களினால் மாசி உற்பத்தி தொழில் பெரும் நலிவை சந்தித்து வருகிறது. இலங்கையில் பெருமளவு மாசி கருவாடு உபயோகிப்பாளர்கள் உள்ளனர் ஆனால் தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை உள்ளதால் சுமார் 100 கோடி அளவிலான மாசி கருவாடு தனியார் குளிர்பதன கிட்டங்கியில் தேங்கி உள்ளதாக கூறும் இவர்கள் மத்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்கின்றனர்.
இது குறித்து இலங்கையில் விசாரித்த போது,உள்நாட்டிலேயே கருவாடு உற்பத்தி செய்யப்படுவதால், வெளிநாட்டில் இருந்து அதே வகையை இறக்குமதி செய்யும் போது உள்நாட்டு கருவாடுகளுக்கான விற்பனை வீழ்ச்சி அடையும் என்பதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவத்தில் மாசி கருவாடு
ஆண், பெண் இருபாலருக்கும் திருமணமான காலத்தில் சிறப்பு உணவாக மாசிக்கருவாடை தினம் கொடுப்பர். இதனால் பெண்களுக்கு நீர்ப்பை, சினைப்பை, கருப்பை, மார்பகம், ஆகிய இந்த உறுப்புகளில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அல்லது ஒவ்வாமை, வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் செய்யும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் தரும் என்பதால் திருமணமான பெண்களுக்கு தினம் மாசிக்கருவாடு கொடுப்பது வழக்கில் உள்ளது.
திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை தினம் கொடுப்பதால் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகப்படுத்துவதுடன், வாதஓட்டம், பித்த ஓட்டம், , ரத்த ஓட்டம் ஆகியவைகளில் தாழ்வை சீர் செய்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion