Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
டைப் 2 சர்க்கரை வியாதியை யூகலிப்டஸ் எண்ணெய் மூலம் மசாஜ் செய்வதால் கட்டுப்படுத்தலாம் என்று சென்னை சித்த மருத்துவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சர்க்கரை வியாதியும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சர்க்கரை வியாதியை குணப்படுத்த தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
டைப் 2 சர்க்கரை வியாதி:
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் பேராசிரியர்களான கீர்த்தி, தீபா, மூவேந்தன், நிவேதிதா, மணவாளன் ஆகியோர் சர்க்கரை வியாதியை யூகலிப்ஸ்ட் தைலம் மூலமாக எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகில் 20 வயது முதல் 79 வயது வரை உள்ள 53.7 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தரவுகள் கூறுகிறது. சர்வதேச அளவில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீரற்று இருப்பதால் ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்கவிளைவுகள்:
இந்தியாவில் மட்டும் 11.4 சதவீத மக்களுக்கு டைப் 2 சர்க்கரை வியாதி உள்ளது. 15.3 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதிக்கு முந்தைய நிலை இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தெரிய வந்துள்ளது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 16.4 சதவீத மக்கள் நகர்ப்புற மக்கள் ஆவார்கள். இதைக்கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிப்பு, கை, கால்களில் வீக்கம், ஜீரண மண்டலம், இதயம், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
யூகலிப்டஸ் எண்ணெய்:
இதை கருதி, யூகலிப்டஸ் எண்ணெய் மூலமாக டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு மசாஜ் மூலமாக சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம். இதற்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த, 30 வயது முதல் 70 வயது வரையிலான சர்க்கரை நோயாளிகள் 50 பேரை தேர்வு செய்தோம்.
அவர்களின் ரத்த சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, மனநலன் சார்ந்த நரம்பியல் செயல்பாடுகள், நுரையீரல் செயல்திறன் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் பதிவு செய்யப்பட்டன.
மசாஜ்:
பூக்கள், மூலிகைககள், தாவரங்கள், வேர்கள் ஆகியவற்றில் இருந்து சாறுகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படி தயாரிக்கப்பட்ட யூகலிப்டஸ் எண்ணெய் 4 மில்லியுடன் நல்லெண்ணெய் 50 மில்லி சேர்த்து சர்க்கரை நோயாளிகள் வயிற்றில் 20 நிமிடம் மசாஜ் செய்யப்பட்டது.
இந்த சிகிச்சைக்குப் பின்பு, மீண்டும் அவர்களுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் ரத்த சர்க்கரை அளவு 4.7 சதவீதமாக குறைந்தது தெரியவந்தது. முக்கியமாக, இதயத்துடிப்பு சீராக இருப்பதும் தெரியவந்தது.
ஆய்வில் கண்டுபிடிப்பு:
மசாஜ் செய்யும்போது, வயிற்றில் உள்ள ரத்தக்குழாய்கள் நெகிழ்ச்சி அடைகின்றன. அப்போது, ரத்த ஓட்டம் சீராகி இன்சுலின் சுரப்பு சமன் அடைகிறது. நரம்புகள் வலுவடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றமும் தேவைக்கு ஏற்ப நடக்கிறது.
யூகலிப்டஸ் தைலத்தில் உள்ள யூகலிப்டஸ் கிளோடிலஸ் மற்றம் பிற ரசாயனங்கள், நீரிழிவு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றன. இந்த தைலத்தின் உதவியால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என முதற்கட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான மனநிலை மற்றும் சிந்தனை ஆற்றல் மேம்பாட்டுக்கும் யூகலிப்டஸ் நறுமண சிகிச்சை உறுதுணையாக இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்தன.
இந்த தைலம் குறித்து தகவல் தெரிந்து கொள்ளவும், பயன்பெறவும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அணுகவும். இன்சுலின் சரியாக தனது பணியை ஆற்றாத காரணத்தால் இந்த டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக இளைஞர்கள், குழந்தைகள் இதை எதிர்க்கின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















