மேலும் அறிய
திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 14-ஆம் தேதி சில கட்டுப்பாடுகளுடன் உள்ளூர் விடுமுறை.. !
திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இதில் சில கட்டுபாடுகளும் உள்ளது, முழுமையாக வாசிக்கவும்.

திருப்பரங்குன்றம்
யாகசாலை பூஜையில் மொத்தம் 75 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் குடமுழுக்கு விழா
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 14-ஆம் தேதி குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கின. விழாவினை ஒட்டி கோயில் வள்ளி தேவசேனா மண்டபம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள. யாகசாலை பகுதியில் மங்கள இசை முழக்கத்துடன் பிரசன்ன அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைக்காக சூரியனிடமிருந்து அக்னி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அடுத்து யாகசாலை நிர்மாண பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கோயிலின் தற்காலிக மூலஸ்தானத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகள் காசி கங்கை காவிரி உள்ளிட்ட ஏழு புனித நீர் நிரப்பப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் சுவாமிகளிடமிருந்து பட்டு நூல் கொண்டு சக்திகளை இறக்கம் செய்யப்பட்டது.
பூஜைகள்
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மூலஸ்தானத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் சக்தி களை இறக்கம் செய்யப்பட்ட புனித நீர் கொண்ட இடங்களை, கோயில் வழியாக கொண்டு வந்து யாகசாலையில் அமைத்தனர். அங்கு யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று முன் தினம் முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால மற்றும் மாலை மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது.
எட்டுகால பூஜை - 75 யாக கொண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை அதிகாலை மூன்று முப்பது மணி வரை எட்டு கால யாகசாலை பூஜைகள் நடக்க இருக்கிறது. 14 ஆம் தேதி காலை 5:25 மணிக்கு மேல் 6;10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். யாகசாலை பூஜையில் 200 சிவாச்சாரியார்கள் மூலம் சுப்ரமணிய சுவாமிக்கு 25 குண்டங்கள், சத்யகிரீஸ்வரருக்கு 9, கோவர்த்தன அம்பிகைக்கு 9, கற்பக விநாயகருக்கு 5, துர்க்கை அம்மனுக்கு 5, ராஜகோபுரத்திற்கு 5, பரிவார தெய்வங்களுக்கு 17 குண்டங்கள் சேர்த்து மொத்தம் 75 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
20 பேர் குருவேத பாராயணத்தில் ஈடுபட்டுள்ளனர்
சுவாமிகளுக்கு தங்கம் வெள்ளிக் குடங்கள் 400, பித்தளை செம்புகள் 100, என புனித நீர் நிரப்பப்பட்டு யாகசாலை நடைபெறுகிறது. அதில் 96 வகையான மூலிகைகள் திரவியங்கள் ஒன்பது வகையான சமித்துகள் யாக பூஜைகள் பயன்படுத்தப்படுகின்றன. பூஜைகளை கோயில் ஸ்தானிக பற்றார்கள் சுவாமிநாதன் ராஜா சந்திரசேகர் சொக்கு சுப்பிரமணியம் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் 200 சிவாச்சாரியார்கள், 70 ஓதுவார்கள், 30 நாதஸ்வர கலைஞர்கள், 20 பேர் குருவேத பாராயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் விடுமுறை
இந்நிலையில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 14,07.2025 திங்கட்கிழமை அன்று, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு பொருந்தாது
எனினும் 14.07.2025 அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள். ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 சனிக்கிழமை திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. 14.07.2025 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்”. எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















