மேலும் அறிய

மத்திய பட்ஜெட்டில் இதை உறுதி செய்யணும் - விவசாயிகள் வலியுறுத்தியது என்ன?

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது தனியாருக்கு விடப்படுவதாக செய்திகள் பரவுகிறது.

தஞ்சாவூர்: 2025-26 மத்திய நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த பயிர்களுக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: 

தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ் : 2025-26 மத்திய நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000 விலை அறிவிக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். பிஎம் கிஷான் நிதியை ஆண்டுக்கு ரூ.12,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது தனியாருக்கு விடப்படுவதாக செய்திகள் பரவுகிறது. இதனை கைவிட வேண்டும். தொடர்ந்து அரசே கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிக அளவில் செய்வதால் அதனை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு ஆலை கொண்டு வர வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அரவை துவங்கி உள்ள நிலையில் வெட்டுகிற கரும்பிற்கு அளிக்கப்படும் காசோலை கூட்டுறவு வங்கிகளில் வரவு வைப்பது மிகவும் தாமதமாகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு புதிய சாக்குகள் வழங்க வேண்டும்.

பெரம்பூர் ஆர்.அறிவழகன் : பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரி பார்க்க வேண்டும். விதைப்பண்ணை விவசாயிகளுக்கு 10 ஆண்டு பழமையான விதைகளுக்கு உற்பத்தி மானியத்தை உடன் வழங்க வேண்டும்.  100 நாள் பணியாளர்களை விவசாயப் பணிக்கு ஈடுபட அனுமதிக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்யும் போது ஈரப்பதம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கரும்பு உற்பத்தியை அதிகரிக்க தனியார் அறைகளில் கொடுப்பது போல் விதை மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு  தங்கவேல்: கடந்த டிசம்பர் ஜனவரி பருவ காலத்தில் விதைத்த உளுந்து சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் நிறமாக மாறி விவசாயிகளுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனை நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் பழனியப்பன் : கடந்த 2018 கஜா புயலில் ராஜா மடம் ஆற்றங்கரையில் சாய்ந்து கிடக்கும் தேக்கு மரங்கள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது. இதை உடன் அகற்ற வேண்டும். சாலையோரங்களில் புதிதாக நடப்படும் மரங்களில் பழவகை மரங்கள் நடுவதில்லை. இனிமேல் நடும் மரக்கன்றுகளில் 40 சதவீதம் மரக்கன்றுகளை பழமரக்கன்றுகளாக நட வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையினையும் மத்திய, மாநில அரசுகள் உடன் பெற்று தர வேண்டும்.

பொன்னவராயன் கோட்டை வா.வீரசேனன் : கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலுக்கு பிறகும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 47 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்து 300 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் சார்பில் கேரளா மாநில கொச்சினை தலைமை இடமாகக் கொண்டு தென்னை வளர்ச்சி வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தில் மண்டல அலுவலகத்தை மீண்டும் பட்டுக்கோட்டையில் துவங்க வேண்டும். பட்டுக்கோட்டை -மன்னார்குடி ரயில் வழி பாதையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் : நெல் குவிண்டாலுக்கு ரூ 3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 உயர்த்தி வழங்க வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களில் சீரக சம்பா, தூயமல்லி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். நெல் கொள்முதலை அரசே நடத்த வேண்டும். ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

திருப்பனந்தாள் சுரேஷ்: எங்கள் பகுதியில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் கட்ட வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை. உடன் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அருமலைக்கோட்டை தங்கராசு : பைபாஸ் சாலையில் உள்ள பனை மரங்கள் வெட்டப்படுகிறது. தமிழ் தேசிய மரமான பனை வெட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ் : கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  கூடுதலாக நெல் அறுவடை இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லணையை கட்டிய கரிகால் சோழனுக்கு அரசு விழா எடுக்க வேண்டும். தொடர்பாக ஏழு ஆண்டுகளாக காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.முகமது இப்ராஹிம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை அம்மாபேட்டை பாபநாசம் கும்பகோணம் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது ஆனால் நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் உடன் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்கும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் பாதித்த பயிர்களுக்கு உடன் நிவாரண நிதி வழங்க வேண்டும். 

இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வேளாண் இணை இயக்குனர் வித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
Watch Video: அந்தரத்தில் அந்தர்பல்டி.. அசாத்திய கேட்ச் பிடி்தத அலெக்ஸ் கேரி.. சோகத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget