'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூ. 30 லட்சம் நிதி உதவி
நிதி உதவிக்கான காசோலையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசின் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய தொழிலதிபர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கரூரில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூபாய் 30 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
கரூரில் பிரபலமாக செயல்பட்டு வரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் சார்பில், அந்த நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கரூர் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமையில், ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை நேரில் சந்தித்து "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் வீதம் 30 லட்சம் நிதி உதவி வழங்கினர். நிதி உதவிக்கான காசோலையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசின் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய தொழிலதிபர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அரசு பணி திட்டத்திற்காக இந்த நிதியை வழங்கி உள்ளார்கள். அடிப்படையில், அட்லஸ் டெக்டைல்ஸ் நிறுவனம் க.பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ 10 லட்சமும், ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனம் ஓலப்பாளையம் அரசு மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ 10 லட்சமும், சிந்தசிஸ் நிறுவனம் கரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 படுக்கைகளும், நான்கு கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.10 லட்சமும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இந்த நிதியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் வழங்கிய தொகைக்கு இருமடங்காக அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்படும். அதன் அடிப்படையில் அரசு 60- லட்சம் ஒதுக்கீடு செய்யும். மொத்தம் 90 லட்சத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்கள்
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.03.2023) நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் நிலைக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் 2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூன்றாம் பரிசு இந்தியன் வங்கிக்கும் விருது மற்றும் சானறிதழ்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்
2021 - 22 ஆம் ஆண்டு அதிக அளவில் மகளிர் திட்ட சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியது மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு சராசரியாக வழங்கப்பட்ட கடன் தொகை அடிப்படையிலும் மாவட்ட அளவில் முதல் பரிசு குளித்தலை இந்தியன் வங்கி ரூபாய் 15,000 காசோலையும் விருது மற்றும் சான்றுகளும், , இரண்டாம் பரிசு பஞ்சமாதேவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூபாய் 10,000க்கான காசோலை. விருது மற்றும் சான்றுகளும் மூன்றாம் பரிசு கரூர் எச்டிஎப்சி ரூபாய் 5000 காசோலை விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
2021 22 ஆம் ஆண்டில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய தரகம்பட்டி, தோகைமலை, நெய்தலூர், லாலாபேட்டை, பள்ளப்பட்டி ஆகிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், தென்னிலை பாரத மாநில வங்கி, காவல்காரன்பட்டி பேங்க் ஆப் இந்தியா வங்கி, சேங்கல் இந்தியன் வங்கி, பால விடுதி ,கிருஷ்ணராயபுரம், வடசேரி, திருக்காம்புலியூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி என மொத்தம் 15 வங்கி கிளைகளுக்கு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள்
இந்நிகழ்வில் ஐ.ஓ.பி. முதன்மை மண்டல மேலாளர் ஜார்ஜ் பாபு லாசர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.