தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
Aadhav Arjuna Joined TVK: தமிழக வெற்றிக் கழகத்தில், ஆதவ் அர்ஜூனாவை தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா , என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர், ஜான் ஆரோக்கியசாமி அவர்களுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக-வை வலுப்படுத்தும் விஜய்:
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவான தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 19 புதிய பொறுப்பாளர்களை நியமித்து, பெயர் விவரங்களை விஜய் வெளியிட்டுள்ளார்.
19 புதிய பொறுப்பாளர்கள் விவரம்:
1.ஆதவ அர்ஜுனா B.A. (Political science) தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. திரு. CTR. நிர்மல் குமார் B.F.. LLB துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு)
3.திரு. P.ஜெகதீஷ் தலைமைக் கழக இணைப் பொருளாளர்
4. திரு. A.ராஜ்மோகன் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்
5.திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
6.பேராசிரியா திரு சம்பத்குமார் MBA, M.Phil., Ph.D. கழகக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
7.திருமதி.).கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E. செய்தித் தொடர்பாளர்
9.திரு. S.ரமேஷ் B.E. இணைச் செய்தித் தொடர்பாளர்
10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E.. Ph.D. தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
11.திரு. A.குருசரண் DCE. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA. சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
14. திரு. R. ராம்குமார் BCA. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
— TVK Vijay (@tvkvijayhq) January 31, 2025
15. திரு. P.வெங்கடேஷ் D.EEE.. BE (EEE). சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
16. திரு. R.நிரேஷ் குமார் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
17. திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed.சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
18. திரு. B.விஷ்ணு Dip சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
19. திருமதி. A.ஃப்ளோரியா இமாக்குலேட் B.A. சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க. கழகப் பொதுச்செயலாளர்என். ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள்.
’முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்”
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தெரிவித்ததாவது, தவெக தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தோதல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா அவர்கள், என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி அவர்களுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தவெக கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

