மேலும் அறிய
Advertisement
மதுரை: ஹாட் பாக்ஸில் வைத்து கூல்லிப், குட்கா விற்றது அம்பலம்! அதிகாரிகள் விசாரணையில் அதிரடி
மதுரையில் கடந்த 11 மாதத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 24,175 கடைகளுக்கு ரூ. 1.19கோடி அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
அதிகாரிகளின் சோதனையை அறிந்த சிலர் வீடுகளில் ஹார்ட் பாக்ஸில் வைத்து கூல்லிப் மற்றும் குட்கா பொருட்கள் விற்றது அதிகாரிகள் விசாரணையில் அம்பலம்.
அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தமிழகத்தில் கூல்லிப் விற்பனை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதனை தடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் கடந்த சில நாட்களாகவே குட்கா மற்றும் அரசு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரை அனுப்பானடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஹாட் பாக்சில் புகையிலை பொருட்கள்
அந்த தகவலின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் கண்காணித்து வந்த நிலையில், அனுப்பானடி பகலவன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்ததால் வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்ததாகவும் பிடிபட்ட பெண் தெரிவித்துள்ளார். வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஹாட் பாக்சில் புகையிலை பொருட்கள் (கூலீப், கணேஷ்) வைத்த விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதே போன்று சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்த அதிகாரிகள் சோதனை செய்து அவரிடம் 2 கிலோ குட்கா பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை கடந்த 11 மாதத்தில் நடைபெற்ற சோதனை குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி, மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு நம்பர் 1 முதல் இந்தாண்டு செப்டம்பர் 30 வரை உணவு பாதுகாப்புதுறையும், காவல்துறையும் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் (கூலிப், கணேஷ்) உள்ளிட்ட பொருட்கள் தடுக்கும் நடவடிக்கையை மாநகர் மற்றும் மாவட்டங்களில் உள்ள 24,175 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 3,111 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடுமையான நடவடிக்கை
புகையிலை விற்ற 758 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் இருந்து அபராத தொகை ஒரு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாகவும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் தடவையாக 25000 அபராதம் 15 நாள் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், இரண்டாவது முறை என்றால் 50,000 ஒரு மாதம் கடைசி சீல் வைக்கப்படும் என்றும், மூன்றாவது முறை விற்பனை செய்வது தெரிய வந்தால் 3 மாதம் சீல் வைக்கப்பட்டு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion