மேலும் அறிய

Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!

திருப்பூரில் கணவனை கட்டிப்போட்டு மனைவியை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் பாலியல் குற்றச்சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஒடிசாவைச் சேர்ந்த பெண்:

தமிழ்நாட்டில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளனர். 

நடந்தது என்ன?

அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். கோவையில் வேலை பார்த்த அவர்கள் வேலை பிடிக்காத காரணத்தால் ஒடிசாவிற்கு மீண்டும் சென்று விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பூரில் அவர்கள் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூரில் அவர்களுக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேர் அறிமுகமாகியுள்ளனர். 

அவர்கள் தாங்கள் வேலை வாங்கித் தருவதாக அந்த குடும்பத்தினருக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். அவர்களது வார்த்தையை நம்பிய அந்த குடும்பத்தினர் அவர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த அவர்கள் 3 பேரும் அந்த குடும்பத்தினருக்கு தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளனர். 

கணவன் கண்முன் நடந்த கொடூரம்:

இந்த நிலையில், இரவில் நதீம், டானிஸ், முர்ஷீக் 3 பேரும் இணைந்து கத்தியை காட்டி அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணின் கணவரை கட்டிப்போட்டு அவரது முன்னே அவர்கள் 3 பேரும் இணைந்து அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியில் வந்துள்ளது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். திருப்பூரில் வட மாநில பெண்ணுக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாலே பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாவே  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை, இசிஆர் சாலையில் இளம்பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய விவகாரம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் என அடுத்தடுத்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் தற்போது திருப்பூரில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget