Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
sp koil flyover : " ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பாலம் இன்று திறக்கப்படுவதால், 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்"

singaperumal koil bridge: "சிங்கப்பெருமாள் கோவில் பாலத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்"
ஜிஎஸ்டி சாலை - sp Kovil flyover.
சென்னை மற்றும் தென் தமிழகத்தை இணைக்க கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி சாலை என்று அழைக்கக்கூடிய இந்த சாலையில், லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. விடுமுறை நாட்களில், வாகனங்கள் செல்வது பல மடங்கு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.
ஜிஎஸ்டி சாலையில், பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர்ந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
சிங்கப்பெருமாள் கோவில் :
செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. தினமும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் முப்பது முறைக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்த இருபதற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தப் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், பாலம் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
கூடுவாஞ்சேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2006 ஆண்டு இறுதியில் முடிவு எடுக்கப்பட்டன. இதற்கு, அரசு ரூ52.80 கோடி ஒப்புதல் வழங்கி கடந்த 2011 பிப்ரவரி 28ம் தேதி பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் பெரும்புதூர் பக்கமுள்ள பாலப்பகுதி ( பாலத்தின் தூண் அமைக்கும் பணி) மட்டும் கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டது.
சிங்கப்பெருமாள் கோயில் பாலம் கடந்து வந்த பாதை - singaperumal koil bridge plan
இப்பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்கப்பெறவில்லை. இதனால் பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சென்னை எல்லை சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்துடன் கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளில் கழித்து மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பாலம் 740 மீ நீளம், 7.50 மீ அகலத்தில் சுமார் 1308 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features Of Singaperumal Kovil Flyover
சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக சிங்கப்பெருமாள் கோயில் இருந்து வருகிறது. சிங்கப்பெருமாள் கோவில் - ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கனரக வாகனங்கள், சிங்கப்பெருமாள் கோயில் வழியாகவே இந்த சாலையை அடைய முடியும் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது திருச்சி சென்னை மார்க்கமாக உள்ள பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வருவதால், பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறைய உள்ளது. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வந்த நிலையில், இந்தப் பாலம் இன்று திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே 16 ஆண்டுகளாக கட்டுமானம் நடைபெற்ற ஒரே பாலம் இந்த பாலம்தான் என பொதுமக்கள் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

