Morning Headlines: கருந்துளைகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.. நிதி ஆணையத்துக்கு புது தலைவர்! இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- கருந்துளைகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.. இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி சி58 ராக்கெட்..
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இது இன்று காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் படிக்க..
- பிறந்தது புத்தாண்டு; 2024ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்; தலைநகரில் களைகட்டிய கொண்டாட்டம்
கடந்த 2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு படிப்பினையை கற்றுக்கொடுத்து 2024ஆம் ஆண்டுக்கு வழிவிட்டுள்ளது. புத்தாண்டினை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக வரவேற்றனர். இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை மக்கள் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து புத்தாண்டை வரவேற்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சியும் சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு இருந்தது. மேலும் படிக்க..
- 4 முதுகலை பட்டங்கள், பி.ஹெச்டி படித்தும் இந்த கதியா? காய்கறிகளை விற்று வாழ்க்கையை ஓட்டும் பேராசிரியர்
பலரின் வாழ்வில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்கு படித்த பிறகும், பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. அந்த வகையில், பஞ்சாபை சேர்ந்த பேராசிரியருக்கு வேலை கிடைக்காததால் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் படிக்க..
- நிதி ஆணையத்துக்கு புது தலைவர்! யார் இந்த அரவிந்த் பனகாரியா?
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வருவாயை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி உறவை வரையறுப்பதற்கு இந்திய அரசியலமைப்பு பிரிவு 280இன் கீழ் நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆணையம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிதி ஆணையத்தின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து திட்டக்குழு கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மேலும் படிக்க..
- "ஃபிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும்" அட்வைஸ் கொடுத்த பிரதமர் மோடி
கடந்த 2014ஆம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாடி வருகிறார். மேலும் படிக்க..