CBSE Syllabus: மாணவர்களே.. வெளியான முக்கிய அறிவிப்பு- பாடத்திட்டம் மாற்றி அமைப்பு!
CBSE New Syllabus: பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2025 முதல் 2026ஆம் கல்வி ஆண்டில் இருந்து இந்த மாற்றம் அமலுகு வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட வாரியான கல்வி உள்ளடக்கம், கற்றல் விளைவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
பள்ளிகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"பாடங்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப கற்பிக்கப்பட வேண்டும், அனுபவக் கற்றல், திறன் சார்ந்த மதிப்பீடுகள் மற்றும் இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்" என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நெகிழ்வான கற்பித்தல் உத்திகள்
தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023-ன் பரிந்துரைகளுக்கு இணங்க, பல்வேறு கற்றல் தேவைகளை நிவர்த்தி செய்ய நெகிழ்வான மற்றும் சூழல் சார்ந்த கற்பித்தல் உத்திகளைப் பின்பற்றுமாறும் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட புது பாடத்திட்டம் https://cbseacademic.nic.in/curriculum_2026.html என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணைப்பை க்ளிக் செய்து, தேவையான விவரங்களைப் பெறலாம்.
https://cbseacademic.nic.in/web_material/Circulars/2025/14_Circular_2025.pdf என்ற சுற்றறிக்கையில் இந்த விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

