மேலும் அறிய

EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?

அவருக்கு உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் செல்வாக்கான தலைவர் என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி தொடர்பான டெல்லி பாஜக மேலிட உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இபிஎஸ் தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சூடான அரசியல் களம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. இபிஎஸ் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது பேசியது.. அவரை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்தது...

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது என பாஜகவுடன் சேர்த்து அதிமுகவின் அரசியல் களமும் சூடாய் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாக சொல்லப்பட்டாலும் பாஜக வைக்கும் நிபந்தனைகளை அவர் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஓபிஎஸ், தினகரன், சசிகலவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று டெல்லி பாஜக சொல்வதாகவும் அதற்கான வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் முரண்டு பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திமுகவிற்குதான் சாதகம்

ஆனால் டெல்லி பாஜகவே இப்படி நீங்கள் மட்டும் தனியாக இருந்தால் சட்டமன்ற தேர்தலில் நம் கூட்டணி எப்படி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் தினகரன், ஓபிஎஸ் என வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்குதான் சாதகமாக அமையும் என்று பாஜக நினைக்கிறதாம்..

இப்படி எடப்பாடி முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தால் அதிமுகவில் குழப்பத்தை ஏற்ப்படுத்தி செங்கோட்டையன் பொதுச்செயலாளராக மாற்றும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருதாக கூறப்படும் நிலையில்தான், செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார்.  அவருக்கு உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் செல்வாக்கான தலைவர் என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிரான வியூகங்கள்

இந்த நிலையில்தான் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி விசிட் அடிக்க உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பின் போது இபிஎஸ்-க்கு எதிரான வியூகங்கள் வகுப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கூட்டணி தொடர்பாக இபிஎஸ் முரண்டு பிடித்தால் மகாராஷ்டிரா பார்முலாவை இந்த விவகாரத்திலும் பாஜக பயன்படுத்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த டெல்லி பயணங்கள் அதிமுகவின் வெடிக்க உள்ள பூகம்பத்திற்கான முன்னோட்டம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget