Bank Holidays: கதறும் மாத சம்பளதாரர்கள்.. பட்ஜெட்டில் துண்டு - ஏப்ரல் மாத வங்கி விடுமுறை, இத்தனை நாட்களா?
Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Bank Holidays: ஏப்ரல் மாத முதல்நாளே வங்கி விடுமுறை என்பது, மாத சம்பளதாரர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி விடுமுறை - ஏப்ரல் 2025
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் பத்து நாட்கள் வங்கிகள் விடுமுறை வழங்கப்பட உள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கி விடுமுறை இருக்கும். புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்கள் வங்கி விடுமுறைக்கு காரணமாக அமைகின்றன. தங்கள் நிதிப் பணிகளை முடிக்க வங்கிகளுக்குச் செல்ல விரும்பும் மக்கள், வங்கி விடுமுறைகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள பிற முக்கிய நிகழ்வுகள் குறித்து அதற்கேற்று திட்டமிடுவது அநாவசியமான அலைச்சலை தடுக்கலாம்.
கதறும் சம்பளதாரர்கள்:
”மாசக்கடைசி” என்பது நடுத்தர மக்களுக்கு மிகவும் மோசமானது. அதன் வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே வார்த்தைகளால் விவரிக்க முடியும். அத்தியாவசிய செலவிற்கான பணம் கூட இல்லாமல், “Salary Credited” என்ற குறுந்தகவல் எப்போது வரும் என காத்திருப்பர். பல நிறுவனங்களில் மாதத்தின் கடைசி வேலை நாளில், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்டு விடும். ஏற்கனவே மார்ச் மாதத்தில் 31 நாள் இருக்க செலவை கையாள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் நிதியாண்டு முடிவு காரணமாக 28ம் தேதியே சில நிறுவனங்கள் வங்கிகளில் ஊதியத்திற்கான பணத்தை செலுத்தினாலும், ஆண்டு இறுதி கணக்குகளை முடிப்பதற்காக ஊழியர்களின் கணக்குகளில் வங்கி இன்னும் வரவு வைக்கவில்லை. இந்நிலையில் தான், அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் காரணமாக, மார்ச் மாதம் சம்பளம் வருவது மேலும் தாமதமாகும் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி தான் ஊழியர்களுக்கான ஊதியம் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது.
ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்கள்:
- ஏப்ரல் 1 - 2025-26 புதிய நிதியாண்டில் நாம் நுழைவதால், இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும்.
- ஏப்ரல் 5 - ஐதராபாத்-தெலுங்கானா பகுதியில் பாபு ஜகஜீவன் ராம் ஜெயந்தியை முன்னிட்டு வங்கி விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- 10 ஏப்ரல் - மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் வங்கி விடுமுறை இருக்கும்.
- ஏப்ரல் 14 - பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 14ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- ஏப்ரல் 15 - ரிசர்வ் வங்கியின் 'நியமனச் சட்டம்' படி, பெங்காலி புத்தாண்டு தினம், இமாச்சலப் பிரதேச தினம் மற்றும் போஹாக் பிஹு ஆகியவற்றை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வங்கிகள் மூடப்படும்.
- ஏப்ரல் 16 - அசாமியப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ரோங்காலி பிஹு என்றும் அழைக்கப்படும் போஹாக் பிஹுவை முன்னிட்டு, சில பிராந்தியங்களில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 16 அன்று மூடப்படும்.
- ஏப்ரல் 18 - இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவுகூரும் கிறிஸ்தவ புனித நாளான புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 18 அன்று இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
- ஏப்ரல் 21 - கால்நடைகள் மற்றும் செல்வத்தின் கடவுளான பாபா காரியாவைக் கௌரவிப்பதற்காக திரிபுராவில் கொண்டாடப்படும் காரியா பூஜையை ஒட்டி ஏப்ரல் 21 அன்று விடுமுறை
- ஏப்ரல் 29 - பகவான் ஸ்ரீ பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 29 அன்று சிம்லா பகுதியில் உள்ள வங்கிகள் மூடப்படும்.
- ஏப்ரல் 30 - பசவ ஜெயந்தி/அக்ஷய திருதியையை முன்னிட்டு பெங்களூரு பகுதியில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 30 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும்
இணைய வங்கி சேவை:
வங்கி விடுமுறை நாட்களிலும் கூட, ஆன்லைன் வங்கி சேவைகளை எந்த இடையூறும் இல்லாமல் அணுகலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், பில்களை செலுத்தலாம் மற்றும் பிற வங்கி சேவைகளை பயன்படுத்தலாம்.

