IPL 2025 MI vs KKR: முதல் வெற்றி பெறுமா மும்பை? ஹாட்ரிக் தோல்வி பல்தான்ஸ்க்கு தருமா கொல்கத்தா?
IPL 2025 MI vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது.

IPL 2025 MI vs KKR: ஐபிஎல் தொடரில் இன்று முக்கியமான போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை அணியும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்பேக்ட் வீரராக ரோகித்:
மும்பை அணியைப் பொறுத்தவரை இன்று ப்ளேயிங் லெவனில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவர் இம்பேக்ட் வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் காெல்கத்தா இமாலய இலக்கை நிர்ணயிக்க துடிக்கும் என்று கருதப்படுகிறது.
ப்ளேயிங் லெவன்:
மும்பை அணியில் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பாண்ட்யா, நமன் தீர், சான்ட்னர், தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட், அஸ்வனி குமார், விக்னேஷ் புத்தூர் களமிறங்கியுள்ளனர்.
கொல்கத்தா அணியில் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரஹானே, ரிங்கு சிங், ரகுவன்ஷி, ரஸல், ராமன்தீப் சிங், ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளனர்.
பேட்டிங், பவுலிங்:
மும்பை அணி தாங்கள் முதலில் ஆடிய இரண்டு போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொல்கத்தா அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த போட்டியில் மும்பை அணி பெஞ்சில் உட்கார வைத்த விக்னேஷ் புத்தூர், வில் ஜேக்ஸை மீண்டும் களமிறக்கியுள்ளது. மும்பை அணிக்கு விக்னேஷ் புத்தூர், போல்ட், தீபக் சாஹர், சான்ட்னர் இவர்களுடன் அஸ்வனி குமார் பந்துவீச்சு பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களுக்கு விருந்து:
5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிக்கு எதிராக டி காக், நரைன், வெங்கடேஷ் ஐயர், ரஹானே, ரகுவன்ஷி, ரஸல், ராமன்தீப்சிங் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். வருண் சக்கரவர்த்தி, நரைன், ஹர்ஷித் ராணா, ஜான்சன் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
கட்டாய வெற்றி நெருக்கடியில் சொந்த மண்ணில் களமிறங்கியுள்ள மும்பை அணியும், வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ள கொல்கத்தா அணியும் ரசிகர்களுக்கு இன்று மிகப்பெரிய விருந்து வைக்கும் என்று கருதப்படுகிறது.




















