அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிதான் ஆகணும்... 'சிறகடிக்க ஆசை' நடிகையை வற்புறுத்திய இயக்குனர்! காத்திருந்து பழிவாங்கிய சம்பவம்!
சினிமாவில் நடிக்க தொடங்கிய போது, அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை எதிர்கொண்டதாக பற்றி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தா கூறியுள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை எதையும் எதிர்கொள்ளாமல் சிலர் சினிமாவில் ஜெயித்து விட்டதாக கூறினாலும், பலர் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதால் பல வாய்ப்புகளை இழந்து, பின்னர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தங்களுடைய திறமையால் நிலைநிறுத்தி கொண்டுள்ளனர்.
ஆனால் சமீப காலமாக இது போன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் குறித்து பலர் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். முன்னணி நடிகர் , தயாரிப்பாளர், இயக்குனர், என 'க்' வைத்து வைத்து பேசும் நடிகைகள் யாரையும் காட்டி கொடுத்தது இல்லை. காரணம் அவர்களின் கேரியர் பாதிக்கப்படும் என்கிற பயம் தான்.

இந்த நிலையில் தான், சன் டிவியில் இனியா சீரியலில் நடித்து பிரபலமான பின்னர் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடித்த நடிகை ப்ரீத்தா அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்தவர் தான் ப்ரீத்தா. அவர் முதலில், சீரியல் ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அவரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று பிரபலம் ஒருவர் கேட்டாராம். அப்படி நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் நடிக்க வேண்டுமென்றால் அந்த வாய்ப்பே தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்போதும் கூட அந்த பிரபலம் விடவில்லையாம். நீ மட்டும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவில்லையென்றால் உனக்கு நடிப்பதற்கே தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த நடிகை ப்ரீத்தா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
இதையடுத்து அவருக்கு இனியா, சிறகடிக்க ஆசை போன்ற சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இவர் கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியில்... அந்த இயக்குனர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் நடிக்க முடியும் என்று கூறினார். ஆனால், நான் இப்போது அது போல் எந்த ஒரு டார்ச்சரும் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை விட வேறு என்ன வேண்டும்?

அதே போல் என்னை சோஷியல் மீடியாவில் அவரும் ஃபாலோ செய்தார். ஆனால், நான் அவரை பிளாக் செய்துவிட்டேன் இதன் மூலம் நான் அவரை பழிவாங்கி விட்டதாக உணர்கிறேன் என கூறியுள்ளார். மேலும் இதை விட அவரை யாராலும் அவரை அசிங்கப்படுத்த முடியாது என ப்ரீத்தா கூறியுள்ளது ஹை லைட்டாக பார்க்கப்படுகிறது.





















