IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டன் டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்தாண்டு நடந்த ஏலத்திற்கு பிறகு அனைத்து அணிகளும் பல்வேறு புதிய வீரர்களுடன் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் பலமிகுந்த அணியாக இந்த தொடரைில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் முதல் முறை கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் டெல்லி அணியும் களமிறங்கியுள்ளது.
வைரலாகும் வீடியோ:
அக்ஷர் படேல் தலைமையில் களமிறங்கியுள்ள டெல்லி அணிக்காக இந்த முறை விளையாடுகிறார் டுப்ளிசிஸ். ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனாகிய அவர் இந்த முறை டெல்லி அணிக்காக துணை கேப்டனாக களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் டெல்லி அணி ப்ரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கழுத்தில் தூக்கு கயிறுடன் டுப்ளிசிஸ்:
அந்த வீடியோவில் தோன்றும் பாஃப் டுப்ளிசிசைச் சுற்றி அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் ஸ்டப்ஸ் நிற்கின்றனர். உட்கார்ந்திருக்கும் டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிற்றை இறுக்கி மிரட்டும் தொனியில் குல்தீப் யாதவ் நிற்கிறார். அவரது பின்பக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அக்ஷர் படேல் கையில் குத்துச்சண்டை கையுறையுடன் நிற்கிறார். அவருக்கு அருகில் ஸ்டப்ஸ் பொம்மை துப்பாக்கியுடன் நிற்கிறார். இவர்கள் மூன்று பேரும் டுப்ளிசிசை மிரட்டும் தொனியில் நிற்கின்றனர்.
Faf Du Plessis. 🤣❤️ pic.twitter.com/khsCSmGIkR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2025
இந்த வீடியோவில் பயத்துடன் பேசுவது போல பேசும் டுப்ளிசிஸ், என் பெயர் டுப்ளிசிஸ். நான் டெல்லி கேபிடல்ஸ் வீரர். டெல்லி கேபிடல்ஸ் எனக்கு பிடித்த அணி. இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த அணி இந்த அணியே ஆகும். நான் உலகின் தலைசிறந்த பல கேப்டன்களுடன் ஆடியுள்ளேன். ஆனால், அவர்களில் சிறந்த கேப்டன் அக்ஷர் படேல். நான் ப்ரான்சைஸிஸ் அணிகளுக்காக பல ஆண்டுகளாக ஆடி வருகிறேன். பல ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசுகிறார்.
வேடிக்கையான ப்ரமோஷன்:
மிகவும் வேடிக்கையாக இந்த வீடியோவை அவர்கள் டெல்லி அணிக்காக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை அணிக்காக அதிரடி தொடக்க வீரராக உலா வந்த டுப்ளிசிஸ், பின்னர் விராட் கோலிக்கு பிறகு ஆர்சிபி அணியை வழிநடத்தினார். அவரது தலைமையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணிக்காக துணை கேப்டனாக இந்த முறை களமிறங்கியுள்ள டுப்ளிசிஸ் இந்த சீசனிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். 40 வயதான டுப்ளிசிஸ் விரைவில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

