Morning Headlines: ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.. காலை செய்திகள் இதோ..!
Morning Headlines July 12: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
- அமலாக்கத்துறையிடம் தகவல்களை பகிர்ந்துகொள்ள அனுமதி...ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
தேசிய தலைநகர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில நிதியமைச்சா்கள், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில் அமலாக்கத்துறையுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள அதிகாரம் படைத்த அமைப்புகளின் பட்டியலில் ஜிஎஸ்டி நெட்வொர்க் சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க
- சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் எப்போ தெரியுமா? இஸ்ரோ தகவல்
இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், 'சந்திரயான் 3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவுபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- அமலாக்கத்துறை இயக்குநரக தலைவரின் பதவிக்காலத்தை நீட்டித்த விவகாரம்...உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது அமலாக்கத்துறை இயக்குநரகம். இதன் இயக்குநராக தலைவராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு நீட்டித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மிஸ்ராவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் படிக்க
- விஸ்வரூபம் எடுக்கும் செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ரவி சந்திப்பு...
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். 7 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். இந்நிலையில் அவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- கும்பல் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? மத்திய, மாநில அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..
கடந்த 2018ஆம் ஆண்டு, கும்பல் கொலைகளை கொடூரமான செயல்கள் என கண்டித்த உச்ச நீதிமன்றம், இதை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட்டு, தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தது. கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை கேட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. மேலும் படிக்க