மேலும் அறிய

Chandrayaan Launch : சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் எப்போ தெரியுமா? இஸ்ரோ தகவல்

இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் ஈடுபாடு காட்டி வரும் நிலையில், இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலத்திற்கான கவுண்டவுன் எப்போது?

இந்த நிலையில், 'சந்திரயான் 3' விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவுபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. சந்திரயான்-2 விண்கலத்தில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டரான விக்ரம்,  திட்டமிட்டபடி தரையிறங்கினாலும் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது.  'சாப்ட் லேண்டிங்' எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்தது. இதன் காரணமாக, ரோவரை திட்டமிட்டபடி தரையிறக்க முடியவில்லை.

எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சந்திரயான் 3:

இச்சூழலில், சந்திரயான்-3 குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், "சந்திரனைப் பற்றிய நமது புரிதலை சந்திரயான்-3 மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி, ரோபோ ரோவரை இயக்குவதாகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையைப் பயன்படுத்தி சந்திரயான்-3 ஏவப்பட உள்ளது" என்றார்.

சந்திரயான்-3 திட்டத்தின் மதிப்பு, 615 கோடி ரூபாய் ஆகும். அபாயங்களைக் குறைத்து, வெற்றிகரமான பணியை உறுதி செய்வதற்கும் கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு சந்திரயான்-3 உட்படுத்தப்பட்டுள்ளது. பேலோட் கட்டமைப்பு உள்ளிட்ட வடிவமைப்பு, முந்தைய சந்திரயான திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த முறை, வெற்றியை உறுதி செய்வதற்காக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இஸ்ரோ எடுத்துள்ளது. சந்திரயான்-2 போன்றே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சந்திரயான்-3இல் அனுப்பப்பட உள்ளது. ஆனால், ஆர்பிட்டரை எடுத்துச் செல்லாது. தகவல்தொடர்பு செயற்கைக்கோள் போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட உந்துவிசை பகுதி, விண்கலம் 100 கிமீ சந்திர சுற்றுப்பாதையில் செல்லும் வரை லேண்டர் மற்றும் ரோவரை எடுத்துச் செல்லும்.
 
இந்த விண்கலம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அறிவியல் சமூகத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாக இயக்கப்பட்ட விண்கலங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தை கொண்டு எதிர்கால நிலவு தொடர்பான ஆய்வை மேற்கொள்ள சந்திரயான்-3 உதவும்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

Embed widget