மேலும் அறிய

மதுரையில் மீன்பிடி திருவிழா, நாட்டு வகை மீன்கள் வேட்டை ; பாரம்பரியம் காக்கும் கொண்டாட்டம்!

கண்மாயில் இறங்கி கச்சா, ஊத்தா கூடை, பொடிவலை, மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் மீன்களை பிடிக்க துவங்கினர்.

மீன்பிடி திருவிழா

மீன்பிடி திருவிழா தென்மாவட்ட பகுதியில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என பல இடங்களில் பாரம்பரிய திருவிழாக்கள் அதிகளவு நடைபெறுகிறது. இதில் மீன்பிடித் திருவிழாவும் முக்கியமான ஒன்று. கிராமத்தில் இருக்கக்கூடிய கண்மாய்களில் தேதி குறிக்கப்பட்டு மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதற்காக முந்தைய ஆண்டே குல தெய்வங்களை வேண்டிக் கொண்டு ஊர் பெரியவர்களும், தாய் கிராமத்து மக்களும் மீன் குஞ்சுகளை வளர்க்க விடுகின்றனர். பின்னர் மீன்குஞ்சுகள் வளர்ந்த பின், கிராமங்களுக்கு அறிவிப்பு சொல்லப்பட்டு மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. இந்தவகையில் மேலூர் அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர்.

மாங்குளம் கண்மாய் மீன்பிடி திருவிழா -2025

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளப்பட்டி கண்மாய், சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்டுதோறும் இங்கு மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கிராமத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பகுதி கிராம பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து காலை முதல் கண்மாய் கரையில் காத்திருந்த மீன்பிடி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தினர், அனுமதி அளித்தவுடன் ஒன்று சேர கண்மாயில் இறங்கினர். கச்சா, ஊத்தா கூடை, கொசுவலை, மீன்வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் மீன்களை பிடிக்க துவங்கினர்.

நாட்டு வகை மீன்கள் சிக்கியது

இதில் கட்லா, ரோகு, சிலேபி, அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை சில நிமிடங்களிலேயே பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். இந்த மீன்பிடித் திருவிழாவில் நத்தம், பழையசுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நாவினிப்பட்டி, வல்லாளபட்டி, கீழையூர், மலம்பட்டி, சேக்கிபட்டி, பொன்னமராவதி சருகுவலையபட்டி, தனியாமங்கலம் உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது போன்ற மீன் பிடித் திருவிழாக்கள் நடத்தப்படுவதன் மூலம் தங்களது பகுதியில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

பாரம்பரியம் காக்கும் மீன்பிடி திருவிழா

மேலும் மீன்பிடிக்க வந்த இளைஞர் மங்கலாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் பேசினோம்..,” மதுரை மாவட்டத்தில் மேலூர் சுற்றுவட்டாரங்களில் அதிகளவு மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறும். மதுரை சுற்றுவட்டாரங்களில் கடல் பகுதி இல்லை என்பதால் கண்மாய், ஏரி, குளங்களில் மீன்பிடிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். பல்வேறு ஊர்களில் திருவிழா சமயத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படும். அன்று ஒருநாள் சுற்றுவட்டாரங்கள் அனைத்து வீடுகளிலும், மீன்குழம்பு வாசம் தான் இருக்கும். இந்நிலையில் இன்றைய மீன்பிடி திருவிழா சிறப்புமிக்கதாக அமைந்தது. நிறைய வகையான மீன்கள் எங்களுக்கு கிடைத்தது. வளர்ப்பு மீன்களின் வருகையை குறைத்து நாட்டு வகை மீன்களின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். இது போன்ற மீன்பிடி திருவிழாக்கள் நாட்டு வகை மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து மீன்பிடி திருவிழாக்களை பொதுப்பணித்துறையும் ஊக்குவிக்க வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget